REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
S. Esther Juliet Sujatha - India
Entry No:
535
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
உள்ளம் ஆளும் ஆழி
ஐம்பூதங்களில் ஒன்றாய் இருந்தாலும் அகிலத்தை, அண்டத்தை அணைத்துக் கொள்ளும் கடலம்மா!
அனைத்தையும் அடக்கும் ஆளுமையே!
உள்ளம் கொள்ளை கொண்ட ஆழி
தன்னுளே கொண்டிருப்பாள்
உலகம் கோடி
உயிர்கள் வாழ அனுமதிப்பாள்
பல கோடி.
குதுகுலமாய் ஓடி வருவாள் குழந்தையாய்,
மென்யலையாய் நடந்து வந்து மயக்குவாள்
கன்னிப் பெண்ணாய்,
ஆர்பரிக்கும் அலையாய் வந்து அச்சமுறுத்துவாள் அரக்கியாய்
எத்தனை முகம் தான் உன்னுள் உள்ளடக்குகிறாய்?
அமாவாசை அன்று துள்ளி குதித்து கொண்டாடுவாள்
சாமி வந்த பெண் போல,முழுமதியன்று
முதலிரவில் பிரிந்த கணவன் போல காமுற்று ஆர்ப்பரிப்பாள் இரவு முழுதும்.
உன் அலையில் தான் எத்தனை வகை?
அத்துனையும் அதிசயமே!
நிர்மலமான உன் நிறம்
கொள்ளையடிக்கும் உள்ளம்,
உதட்டினில் உவகை ஏற்றும் ,
தொடுவானம் வரை எங்கும் நீலம்,
அதில் நீந்தி
முத்து எடுக்கலாமா?
நீளமான பயணம் கொள்ளலாமா என உள்ளம் கொப்பளிக்கும் மகிழ்ச்சியில்!!!
உணர்வுகளோ ஏங்கும் எண்ண அலைகளில்!!!
அந்த நீல வண்ணத்தில் எத்தனை வகை!!
வெண்யலையோடு புரளும் நீலம்,
பசுமை நீலம்,வெளிர் நீலம், கரும்நீலம், கரிக்கட்டை நீலம்,
செங்கதிரோனொடு கலந்த செந்நீலம்,
மயக்கும் மாலைப்பொழுதினில் மஞ்சள் நீலம்...
அடடா எத்தனை, எத்தனை!!!
எண்ணத்தில் எண்ணி முடியவில்லை இன்னும்!!
பாற்கடலின் உப்பு காத்து கூட மணக்கும்,
அன்பே! ஆழியே!!
எத்தனை நதிகளின் நீரை ஒளித்து வைத்து ஒளிர்கின்றாய்.
உன்னை கண்ட நிமிடமெல்லாம் உற்சாகம் கொப்பளிக்கும் உன் அலைகள் போல என்னுள்,
எப்போது நீ அடங்குவாய்
அலைகளில்லா கடலாய்!!!
நிகழ முடியா நிகழ்வு
நிகழ்த்த முடியா நிதர்சனம்!!!!
ஓயாத அலைகள் ஓவியமே,
என் கண்களுக்கு காவியமே
உன் மேல் கொண்ட காதல்
தீராத மோகமே,
உன் மடி மீது
விளையாடிய நொடிகள்
கவினுறும் பொழுதுகளே!!
உன்னுள் எத்தனை கோடி இன்பம் ஒளித்துள்ளாய்,
உன்னுள் உறைய எப்போதும் தீராத தாபம் உண்டு
முனைவர்
எஸ். எஸ்தர் ஜூலியட் சுஜாதா