REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Rosini C - India
Entry No:
145
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
குரலின் இன்னிசை நீயோ ?
உன்னை ரசிக்கும் சங்கீதம் நானோ !
அழகின் சிற்பம் நீயோ ?
உன்னை வியர்ந்தப் பார்க்கும் கவிஞன் நானோ !
வானில் தோன்றும் வானவில் நீயோ ?
உன்னை புதிதாக பார்க்கும் குழந்தை நானோ !
பூவின் இதழ்கள் நீயோ?
உன்னை அயர்ந்துப் பார்க்கும் காதலன் நானோ !
கடலின் அலைகள் கூட
கரை ஒதுங்கும் !
உன்னை நினைத்து என் நாட்கள்
என்றும் மனம் ஒதுங்கியதில்லை !
மழை துளிகள் விழும் அந்த
மண் வாசம் மாறினாலும் ;
உன் கண்கள் பேசும் மௌன
மொழி மாறாது !
நாட்கள் கடந்தாலும் ,
வாழ்க்கை ஓடினாலும் ,
இளமை கழிந்தாலும் ,
தோல் சுருங்கினாலும் ,
தனிமை முடங்கினாலும் ,
என் மனதில் விதைத்த
உன் நினைவுகள் அழிவதில்லை !
நிலவு இருந்தால் தான் இரவுக்கு அழகு !
மரம் இருந்தால் தான் காட்டிற்கு அழகு !
மண் இருந்தால் தான் விண்ணிற்கு அழகு !
மனம் இருந்தால் தான் குணத்திற்கு அழகு !
உயிர் இருந்தால் தான் உடலுக்கு அழகு !
நீ இருந்தால் தான் நான் வாழும்
வாழ்விற்கு அழகு !
வானில் பறந்தேன் அழகான
சிறகு உடைய பறவை போல !
இனிமையாக ஆடினேன்
தோகை விரித்த மயில் போல !
காற்றில் மிதந்தேன்
வெண்பஞ்சான அந்த வெள்ளை மேகங்கள் போல !
இன்று நீ என்னோடு இல்லாமல்
தவிக்கிறேன் ;
தாய்மை இல்லாத அந்த பிஞ்சு
பிள்ளை போல !
வெறுக்காத உன் நெஞ்சோடு ,
அழியாத உன் அழகோடு ,
கலங்காத உன் கண்ணோடு ,
மாறாத உன் மார்போடு ,
பாசமான உன் பார்வையோடு ,
கவர்ந்திழுக்கும் உன் கண்களோடு ,
கரைந்துவிட்டேன் ! சிதைந்து விட்டேன் !
என் மனதை உன்னிடம்
தொலைத்து விட்டேன் !
உன் வாசம் என் மீது
வீசும் அந்நேரம் ;
மழை வாசம் கூட என்
சுவாசமாய் மாறும் !
உன்னை விட்டுப் பிரியும் அந்நேரம் ;
மரணம் கூட என் மனதில் எட்டிப்
பார்க்கும் !
இரவில் உன்னை நினைத்து
உறங்கும் அந்நேரம் ;
விழி ஓரத்தில் வரும் நீர்
துளிகள் கூட இனிக்கும் !
என் தோளில் சுமந்த உன்னை ,
இறுதி வரை என் நெஞ்சிலும்
சுமப்பேன் !
காதலியாக மட்டுமல்ல ;
உன் தாய் யாகவும் தான் !
- ரோசினி.சா