REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Ranjani PR - India

Entry No: 

186

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

'ஜில்'என்று சில வரிகள்.

சித்திரை மாதத்து கோடை வெயில்
விறகு கட்டுச் சுமையில்
தேய்ந்த செருப்புடன் நடை பயணம்......

வீடு சேர்வதற்குள் வெளியே சத்தம்
குச்சி ஐஸ் விற்பனை அதிகரிப்பு
குழந்தைகள் முகத்தில் சிரிப்பு

தாகத்திற்கு வாங்கலாமா ஐஸ் என்ற நினைப்பில்....
இடுப்பில் இருந்த பர்ஸில்
இருந்தது ரூபாய் இருபது

தனக்கு ஒன்று வாங்குவதற்குள்
பக்கத்தில் ஏங்கிய முகத்துடன் ஏழைச்சிறுமி.....

வாங்கிய ஐஸை அவளிடம் நீட்டினேன்
சிறுமியின் மகிழ்ச்சியில் கிறங்கினேன்...

சில நிமிடம்... மனசு சந்தோசமா பறந்து இறக்கையுடன் வானத்தில்......