REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Ranathive. K Ranathive. K - India
Entry No:
551
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பு
உலக உயிர்களின் தாரக வேதம் அன்பு தான்,
மனித இனத்தின் ஆணி வேரும் அன்பு தான்,
உயிர்கள் வாழ மரங்கள் கொடுக்கும் தூய காற்றும்
அன்பு தான்- ஆம் மரமும் அஃறிணை உயிர்தானே,
இளைப்பாற நிழல் தந்து உதவும் மரத்தின் அரவணைப்பும் அன்புதான்,
வண்டுகளும் எறும்புகளும் தவழ்ந்து ஓடி ஆடி உறவாடும்,
கிளைகளிலே கிளிகளும் குயில்களும் இனிய இசைபாடும்,
அடடா காக்கையும் தன் இருப்பிடத்தை அமைக்கும்,
உலகப் பொறியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தும் தூக்கணாங்குருவியும் கூட்டினைக்கட்டும்,
உயிர்கள் அனைத்திற்கும் காய் கனிகளை அளிக்கும்,
இந்த மரத்தின் அன்பை என்ன சொல்லிப் போற்றுவது,
அடடா சூரியன் சுட்டெரிக்கும் போது நிழல் தந்து காப்பதும்,
மழைக்காலங்களில் பசுமை போர்த்தி நம் கண்களுக்கு விருந்தளிப்பதும் என்னே வியப்பு!
இந்தப் பூமியில் உயிர்கள் வாழ மரங்கள் அடிப்படை,
மரம் காட்டும் அன்பு விலைமதில்லாதது,
எத்தனை எத்தனை நன்மைகள் தந்து அன்பு காட்டும் மரத்தையும் வெட்டுவது ஏனோ?
மரமும் அன்பு காட்டும் உயிர்தான்,
அதனால் தான் எதிர்ப்பு செய்யாமல் நிற்கிறது,
சுய நலத்திற்கு வெட்டும் மனிதனைவிட பொது நலமாய் பயன்படும் மரமே மனிதனை விட அழகிலும் அன்பிலும் உயர்ந்து நிற்கிறது,
மரம் வளர்ப்போம் உயிர்கள் காப்போம்,
மரங்களின் அன்பே உச்சம் தான்,
மரங்களைப் போற்றுவோம் வணங்கி வளர்ப்போம் ,
இந்த வையம் காப்போம்.