top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Ramachandran Venkataraman - India

Entry No: 

394

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

பைங்கிளி

இனிய காலை பொழுதினிலே
மலர்கள் பூக்கும் வேளையினிலே
பழம் கொத்த வந்தாயோ இல்லை
என் மனம் கொத்த வந்தாயோ
பைங்கிளியே!

ஆவின் குரல் ஒலிக்கிறதே
அன்பின் உறைவிடம் தெரிகிறதே
இனம் தெரியா உவகைதனை
ஈய வந்தாயோ பைங்கிளியே!

பட்டாம் பூச்சி பறக்கிறதே
என் மனமோ பரிதவிக்கிறதே
எண்ணம் ஈடேற வந்தாயோ
வண்ணம் கொண்ட பைங்கிளியே!

இரை தனை தேடும் பைங்கிளியே
இன்னல் தீர்க்க மறந்தனையோ
இறையினை நாடும் மாந்தருக்கே
இன்பம் சேர்ப்பாயோ என்னுயிரே!

Entry No: 

395

தமிழ் கதை (Tamil Kadhai)

அங்கங்கே ஒரு நாடல்ல பற்பல நாடுகள் இருந்தன.

அங்கு வில்லும், புலியும், மீனும் மற்றும் சிங்கமும் மாறி மாறி
ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தன.

இயல், இசை, நாடகம் ஓங்கி வளர்ந்தன.
ஈதல் இசைபட வாழ்தல் நெறியானது.

உழைக்காது உணவுண்ணும் வழக்கமில்லை.
ஊதாரிச் செலவினங்களும் இல்லை.

எண்ணும் எழுத்தும் கண்களாயின.
ஏற்றம் இறைப்பதே முதன்மை தொழிலானது.

ஐம்பெரும் காப்பியங்கள் உருவாயின.

ஒவ்வாப் பழக்கங்கள் விலக்கப்பட்டன.
ஓதுவார்கள் போற்றப்பட்டனர்.

ஔவியம் பேசுதல் இழிவாக கருதப்பட்டது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என வாழும் இடங்களும் இலக்கணமாயின.

மனிதத்தின் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சிக்கும் மறையும் முறையும் வகுக்கப்பட்டன.

மீனும், மானும், கிளியும், சோலை மயிலும்
அன்னமும், காகமும் மற்றும் பல உயிரினங்களும் அவற்றின் உணவுகளும்
தழைத்தோங்கின.

ஒரு வீட்டின் அடுப்பில் ஒரு கிராமமே உண்டது. ஒரு வீட்டின் நிகழ்வில் அவ்வூரே பங்கேற்றது.

சமயங்கள் வாழ்க்கை நெறிகளைத் தந்தன,
விழிப்புணர்வு தந்தன, காழ்ப்புணர்ச்சி இல்லை.

தொழில் முறையில் மக்கள் வகுக்கப்பட்டனர்
தொழில் செம்மையடைய.

ஆனால் நாளடைவில் அவையே இனமாகவும், குலமாகவும் மருகி ஏற்றத்தாழ்வினை ஏற்படுத்தி இன்றும் முன்னேற்றத்திற்கு தடை கற்களாகி நிற்கின்றன.

அந்நியர்கள் வந்தனர்
ஆதிக்கம் செலுத்தினர்
இயன்ற வரை நம் பொருள் சுருட்டினர்
ஈவிரக்கமின்றி கொன்றனர்
உணர்வுகளை தாக்கினர்
ஊமைகளாக்கினர்
எதிர்ப்போரை கழுவில் ஏற்றினர்
ஏவல் புரிய வைத்தனர்
ஐம்புலன்களை ஒடுக்கினர்
ஒருமையை கலைத்தனர்
ஓட விரட்டினர்
ஔவியம் வளர்த்தனர்
மதங்களை புகுத்தினர்
மக்களை பிரித்தனர்
இயலாமற் போகும் வரை நம்
செல்வங்களையெல்லாம்
கொண்டு சென்றனர்
பின் நம்மை விட்டுச் சென்றனர்
அத்துடன் பிரித்தாளும் முறையினை
கற்பித்து சென்றனர்.

இயக்கங்கள் தோன்றின
இழி முறைகளும் தோன்றின
ஒரு சமயம் ஒருங்கிருந்த நாடு இன்று
எதனாலும் இணைந்தில்லை
பொருளாசை காட்டி
மன மாற்றங்கள், மத மாற்றங்கள்
ஒரு மதத்து இறை இசைபாடில்லை
ஏன் இறையே இல்லை
ஆயின் பிற மதங்களின் இறை இசைவானது
மதம், இனம், குலம் மற்றும் மொழி
இவையாவும் பிரிவினை கருவிகளாயின.

இன்றும் இப்பரந்த நாட்டிலும்
மீனும், மானும், கிளியும், சோலை மயிலும்
அன்னமும், காகமும் மற்றும் பல உயிரினங்களும் அவற்றின் உணவுகளும்
தழைத்தோங்குகின்றன.

ஆனால் மனிதரில் மன அமைதியில்லை
அடுத்து வரும் தலை முறைகளுக்கு நாம்
எத்தகைய நாட்டினை விட்டுச் செல்கின்றோமென அச்சமும் பொறுப்புமில்லை.

இன்று அந்நியர்களாதிக்கமில்லை ஆனாலும்
நாம் அடிமைகள்
மொழியின்
சாதியின்
இனத்தின்
மதத்தின்
பிரிவினை உணர்வுகளின்
அடிமைகள்!
இவற்றிலிருந்து என்று விடுபடுவோம்?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

Entry No: 

397

English Poetry

Resting my back on an old boat
Was gazing stars in the dark sky
With waves racing each'other
To stroke my barren feet

Could hear some of 'em say
'I win, I win' and some silent
The stars twinkling at me
Bringing smiles in my face

All by myself and no soul around
How long would this last
How much happy could it go
How much joy would i know

T'was no soul around
Only stars and waves
All by myself, all by my self
How much joy would i know

Think of joy, think of happiness
With waves stirring my feet
I think of you my love

With stars gazing at me
With darkness cuddling me
I think of you my love

With breeze passin' my face
And waves come in curves
I think of you my love

I dig deep, both my hands
And grasp full of sand
I think of you my love

As i feel the shells
Like my fingers touch thee
I think of you my love

As i think of you
You enrobe me with dreams
Deep inside my heart
And i get encapsulated 
 - by you!

bottom of page