top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Raju Arockiasamy - India

Entry No: 

241

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

# மாய விருப்பம்

மௌனங்கள் விரும்பும் எனக்கு
அருவியாய் உன் பேச்சு
காதுகளுக்கு அயர்ச்சி என்றாலும்
இதயத்தில் குதித்து ஓடுகிறது

அபத்தந்தான் என்றாலும்
அழகு நிச்சயம்
உன் வாடாப்போடாக்கள்
என் தெய்வங்கள்

அது ஒரு
மாய விருப்பம்
நிச்சயம் நிறைவேறும்
நான் நீயாவது

கொஞ்சம் தேநீர்
நிறைய புன்சிரிப்பு
எந்நாளை உயிர்ப்பிக்கும்
உன்னெளிய மந்திரங்கள்

உடல்மொழி அழகு
உயிர்மொழி அதிசயம்
காதலும் சேர்கையில்
செம்மொழியாய் உச்சத்தில்

ஆச்சர்யமான முரண்
உனக்கும் எனக்குமிடையில்
இணைத்தது தெரியவில்லை
பிரித்திட ஏதுமில்லை

ஏரணம் ஏதுமில்லாமல்
சில நாடகங்கள்
ஒவ்வொன்றிலும் பூக்கிறது
புரிதலுடன் காதல்

பனி பெய்து
குளம் நிரம்புமா?
உன் பார்வைகளால்
வழியும் காதல்

இன்னும் குழந்தையாகவே
நீ இருக்கிறாய்
அப்படியே ஏற்கிறேன்
அதேயழகான திமிரோடு

அவரவர் கண்ணுக்கு
அதுஅது அழகு
எனக்கு உன்மொத்தமும்
உனக்கு என்கவிதைகள்

என்கவிதையில் உன்குரல்
உன்குரலில் என்கவிதை
பிறவிப் பயன்
இதையன்றி வேறு

அசந்து நிற்கிறது
இரசிக மனம்
என் கவிதையை
நீ ருசிக்கையில்

உன்னை விட வேறொருத்தி
நினைத்துப் பார்க்கிறேன் நான்
ஆஹா ரம்பைகள் மேனகைகள்
சே எவளும் பொருந்தவில்லை

# ராஜூ ஆரோக்கியசாமி

Entry No: 

265

English Poetry

Our Love… Our Life

Even heavy rain
Dangerous only
The staggering mind
By immersing in your memories

Nothing in this world is
The rarest of the rare
More than the love
Soaking in your eyes

Some in the world
Can't be translated at all
Your silences
My anxieties

I thought to measure
Your grand beauty
Buried in the hair itself
Where to the whole thing

Soundless loneliness
I searched for words
Trapped in your beauty
Make fun of me

Except for love,
You ask "What else you know?"
When I think about that
Vacuum everywhere in the mind

I have no faith
In reincarnation
For my love
Seven rebirths

What to say?
What to leave?
Everything is unforgettable
Memories of our love

My love for you
And poems for me
Living truthfully
Never dying boons

You never intervene
Into my anything
I never tend
To incline your head in anything

I am not Buddha
You are not Yasoda
Without any bodhi tree
Our life is Buddhism

# Raju Arockiasamy

bottom of page