top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

RAJASEKAR E - India

Entry No: 

506

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

"காதல்"

இரவு முழுவதும் காத்திருந்த மலர்கள்
உன் முகம் பார்த்தவுடன் பூப்பது ஏனோ...?
அழகிய வெட்கத்தால் சிரித்தது தானோ...!!

பூவிழிக் கண்டு பூக்கள் ரசித்தது
தேக சுவாசத்தால் இலைகள் அசைந்தது....
மாமழைக் கொட்டி மாற்றம் நிகழ்ந்தது
கனவுகளும் உன் நினைவுகளால் ஏங்கி தவித்தது......!!

ஆலம் விழுதாய் அன்புகள் முளைக்க
ஆசைகளும் அம்பெனத் தொடுக்க...
ஆயுளும் கூடிக் கொள்ளும்
ஆனந்தமாய் காதல் செல்லும்...!!

ஈசலாய் வாழ்ந்தாலும் உன்னுடன்
ஒருநாள் போதும்
ஈராயிரம் முத்தங்கள் தருவேன்
இறந்த பின்னும் நித்திரையில் மகிழ்வேன்....!!

புதுமையாய் புகலிடம் பெற்றேன்
புஞ்சுதல் அனுபவம் கற்றேன்....
காதலும் சதம் அடித்து
நினைவுகளில் பதம் பதித்தது.....!!

என்றும் நட்புடன்
ராஜசேகர். ஏ

bottom of page