top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Ragasudha R - India

Entry No: 

107

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

கண்ணம்மா...

வெந்தனல் மீதினில் விழுந்திட்ட​ 'பூ'வென​
வேதனை கொள்ளுதடி
கண்ணம்மா..
மனம் வேதனை கொள்ளுதடி,

என் வேதனை மாற​ - உன்
வாய்மொழி வார்த்தையாய்
ஒர் சொல்லும் போதுமடி
கண்ணம்மா..
என் வேதனை மாறுமடி..!

ஆதவன் அணலிலே வதைபடும் புழுவென​
அல்லலில் துடிக்குதடி
கண்ணம்மா..
மனம் அல்லலில் துடிக்குதடி,

என் அல்லலும் தீர்ந்திட​
அன்னமுன் மடியினில்
அரைநொடி போதுமடி
கண்ணம்மா..
என் அல்லலும் தீருமடி..!

காட்டாற்று வெள்ளத்தில் உடைபடும் அணையென​
கதறி உடைந்தழுவுதடி
கண்ணம்மா..
மனம் கதறி உடைந்தழுவுதடி,

என் அழும் மனம் ஆறிட​
அல்லியே உன்விழி
பார்வையே போதுமடி
கண்ணம்மா..
மன​ ஆறுதல் சேருமடி..!

சீற்றத்தின் இடையிலே சிக்குண்ட​ படகென​
இன்னலில் தவிக்குதடி
கண்ணம்மா..
மனம் இன்னலில் தவிக்குதடி,

இன்னலும் ஓடிட​
தங்கம் என் அருகில் நீ
இருந்தாலே போதுமடி
கண்ணம்மா..
எந்த​ இன்னலும் அனுகாதடி..!

bottom of page