top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Raaji Anand - United Kingdom
Entry No:
547
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காலையில் புலரும் இளம் பகலவன்
மாலையில் அரும்பும் மலரின் நறுமணம்
அந்தி சாய வீசும் இளகிய தென்றல்
நிலவின் கதிர் ஒளிரும் காந்தம்
காலங்கள் மாறினாலும்
இயற்கையின் மாறா கவின் இசைவுகள்
அது போல் ஆண்டுகள் பெருகினாலும்
நட்பு மாறா
உறவு தளரா
இனிமை குறையா
கேளிக்கை குன்றா
அன்பு தாழா
சிநேகம் மறையா அகலா
நிலைக்கட்டும்
எல்லா காலத்திலும்
எல்லோர் வாழ்விலும்
மகிழ்ச்சி பெருகிச் செழித்துத்
திகழட்டும்
நல்லவையாகவும் கனியட்டும்
கிட்டட்டும்
புதிய எண்ணங்கள்
நம்பிக்கைகள்
நல்வாழ்த்துக்கள்
✍️ராஜி ஆனந்த்🌹
bottom of page