top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

R. RAMESH R. RAMESH - India

Entry No: 

376

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல்...

உலகில் பிறந்த அனைவரும் காதல் என்ற அற்புத சுகத்தை உணராமல் இருந்திருக்க மாட்டார்கள்!

காதல் ஒருவனுக்குள் வந்து விட்டால் மிருககுணம் கொண்ட மனிதனை கூட எளிதில் மாற்றி விடும்.காதல் ஒரு கைக் குழந்தை போன்று நம்மையும் குழந்தை போலவே மாற்றிவிடும்!

காதல்!
அவன் செல்லாத இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லும்.கற்பனை என்றால் என்னவென்று அறிய வைத்திடும்.. கற்பனை உலகத்திலேயே வாழ வைத்திடும்...

அவன் கற்பனைக்கு உயிர் கொடுத்திடும்..வாழும் நாட்கள் எல்லாம் சொர்க்கமே. மேகக் கூட்டங்களைக் காகிதமாக்கி நீலவானத்தை பிழிந்து மையாக்கி கவிதை ஒன்றை வடித்திட வைத்திடுமே !!!


கல்லூரி சென்று படிக்காமலேயே பட்டம் பெற்று விடுவான் கவிஞன் என்று. காதல் சுகமான இன்பம் அவ்வின்பத்தை முழுமையாக உணர முடியுமே தவிர அளவிட்டுக் காட்ட முடியாது.

காதல் நீ யாரென்று உணர வைத்துவிடும்! உன்னை நீயே தொலைத்து விட்டு தேடும் சுகத்தை கொடுக்கும்! சித்திரைக் குளிராக மாறும். மார்கழி வெய்யிலாக மாறும்.
புதிய பரிமானத்தை உருவாக்கும்!

தனிமையில் பேசி சிரிக்க வைக்கும்.கோபம் என்றால் என்னவென்று கேட்கும்.
இதுவரை பார்த்த நிலவை நிலவு மங்கையாக பார்க்க தோன்றும்.போகும் பாதை ஆயிரம் இருந்தாலும் பாதை எங்கும் வண்ணமயம்...

பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் வழித்துணையாக மாறும்.. உருவம் இல்லா இந்த காதலை முழுமையாக உணர்ந்து கொள்ளத்தான் முடியுமே தவிர படம் வரைந்து உருவம் காட்ட முடியாது...

பல வரலாற்றுப் படைப்புகள் கூறுமே காதல் என்றால் என்னவென்று. காலத்தை வென்ற காதலும் உண்டு. என்றுமே காலத்தால் அழியாத காதலும் உண்டு...

சுகமான வலிகளும் இன்பமே!
இனிய நினைவுகளைக் கொடுத்திடும்.
உன்னத உணர்வே! உணர்விலும் மனதிலும் கலந்த சுகமான காதல்!
மனித இனம் மாண்டாலும்!
காதல் என்றுமே மாண்டு போகாது!
காதல் எக்காலத்திலும் சுகமானது!

ர. ரமேஷ்
திருப்பூர்

bottom of page