REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
PRIYATARSINI OTHAYA KUMARAN - Malaysia
Entry No:
511
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பின் முகவரி!
கால நேரம் பாராது அன்பை
அள்ளிக் கொடுக்கின்ற
அமுதசுரபி அம்மா!
இரவில் சூரியனாய் விழித்திருந்து
கருவின் சேய்க்காக உறக்கத்தைத் துறந்து
கண்ணிமையாய் காக்கும் பணி
அது பிள்ளைகளுக்காக காட்டும் அன்பின் நேசம்!
சோகத் தீண்டலின் உச்சத்தில் தளர்திருக்கும் பொழுது
இளைப்பாறுவது தாயின் மடியில் அல்ல மனத்தில்
அன்பின் ஊற்றாய் கிடைத்த வாழ்வின் சூட்சமம் அம்மா!
அன்பு ஒரு ஆழகான உயிர் பலர் மீது வந்தாலும்
வாழ ஆசைப்படும் ஒரே இடம்
அம்மவின் மடி எனும் கூட்டில் மட்டுமே!
ஒப்புவமையற்ற அம்மாவின் அன்பு
நீர்க் கோலமிடுகிறது என் இரு விழிகள்!
குடும்பம் என்னும் இசையின்
இராகமாக இணைந்து
வெற்றி வாசல் செல்ல
துணையாய் நின்று அயராய் உழைத்து
அச்சாணியாய் திகழ்வது
தந்தையின் தன்னலமில்ல அன்பு!
நிழல்கூட சமயத்தில் நம்மோடு நிற்பதில்லை
நிஜமாக இருப்பது தந்தை மட்டும் தான்.
தந்தையின் அன்பில் வளர்பிறையாகி
அவரின் அன்பான கண்டிப்பால் முழுமதியாகிறோம்!
தந்தையின் அன்பை
உணர்வோடு நுகர்கிறது
என் இதயம்!
சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட
சோகங்களை பகிர்ந்து கொள்ளும் உண்மையானது
நட்பின் அன்பு!
உருவமற்ற அன்பு எனும் பொக்கிஷத்தில்
உயர்ந்தவர் தாழ்ந்தவர் இங்கில்லை
குணத்தில் நண்பர்கள் ஒரு தாய் பிள்ளை
நட்பால் பல தாய் அன்புண்டு
நட்பால் பல தந்தை ஆசி உண்டு
அர்த்தமுள்ள வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவது
‘அன்பு’
அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக மாற்றுவது
‘நட்பு’
இதயத்தில் உன் அன்பான நினைவுகளைச் சுமக்கும்
என் மனம் கல்லறை அல்ல
மாறாக கருவறை !
வரையறையே கிடையாத அன்பைக் கொட்டும்
நட்பை நினைக்கையிலே
அமுதம் சுரக்கின்றது என் உள்ளம்!
அன்பு பிறக்கும் போது
பிறக்கும் இயற்கை குணம்!
கடினமான இதயும் கூட கரையும்
அன்பை மழையாய் பொழியும் போது!
கசப்பான மருந்துகளை விட
கனிவான அன்பு ஒன்றே
பல காயங்களுக்கு மருந்தாகிப் போகிறது!
அன்பு ஒளிரும் இடத்தில்
கடவுளை பார்க்கலாம்..
கடவுள் உன் உருவிலும் தெரியலாம்..
நீ அன்பு செய்தால்.!
Entry No:
474
தமிழ் கதை (Tamil Kadhai)
அன்பு!
புக்கிட் செலாரோங் தோட்டத்திற்குள் நுழையும்போதே வழிநெடிகிலும் செம்மண் சாலை நம்மை வரவேற்கும். சாலையின் இரு மருங்கிலும் செம்பனை மரங்கள். அந்த தோட்டத்தற்குள் நுழைந்தவுடன் முதலில் பார்ப்பது புக்கிட் செராலோங் தமிழ்ப்பள்ளிதான். அதிலிருந்து சற்று தொலைவில் வரிசையாக வீடுகளைக் காணலாம். அங்குதான் குமரன் வாழ்ந்து வந்தான்.
சுற்றிலும் மரங்கள், பூத்துக்குலுங்கும் பூச்செடிகள், மாணவர்களின் சத்தம் ஏதும் இன்றி அப்பள்ளி விரிச்சோடி காணப்பட்டது. கோறணி நச்சில் காரணமாக சில நாட்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
எப்பொழுதும் குமரனின் பெற்றோர் வேலைக்குச் சென்றால் இரவில் தான் வீடு திரும்புவர். இந்த விடுமுறையில் பெற்றோர்களும் உடன் பிறந்தவர்களும் தன்னுடன் இருப்பது அவனுக்குள் ஒரு வித மகிழ்ச்சியையே அளித்தது. இதற்காக அவன் பல முறை ஏங்கியதும் உண்டு. கோவிட்-19-நடமாட்ட கட்டுப்பாட்டை முன்னிட்டு கொடுக்கப்பட்ட விடுமுறை நேரத்தை நல்வழியில் செலவிட்டான் குமரன். மதியம் தன் சகோதரர்களுடன் விளையாடுவது, தனக்கு பிடித்த படங்களை வரைவது என்று தனக்கு கிடைத்த விடுமுறையை நல்வழியில் பயன்படுத்திக் கொண்டான்.
இப்பொழுது பாடங்கள் எல்லாம் மின்னியல் கூட்டம் (கூகிள் மீட்),மின்கற்றல் இயங்கலை பயில்களம் வழிதான் பயிற்றுவிக்கப்படுகின்றன. இன்றோ காலத்தின் கட்டாயத்தில் ஆசிரியர்கள் கைப்பேசியில்தான் பாடம் நடத்த வேண்டிய கட்டாயதில் இருந்தனர். ஆசிரியர் கொடுக்கும் வேலையை எல்லாம் தட்டாமல் செய்துவிடுவான் குமரன்.
குமரன் என்னதான் தோட்டத்தில் பிறந்த சிறுவனாக இருந்தாலும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் அதிகம். கொரோனா பற்றிய தேசிய அளவினான போட்டிகள் ஆங்காங்கே அறிவிக்கப்பட்டிருந்ததை அவனுடைய வகுப்பு ஆசிரியர் மூலம் அறிந்தான். கொரொனா பற்றிய தகவல்களை ஆராய்ந்து மூன்று நிமிடத்திற்குள் காணொளி ஒன்று தயாரிக்கும் போட்டியில் கலந்துக் கொள்ள பெயரை பதிவு செய்துகொண்டான். கொரோனா நோய் பற்றிய விவரங்களை அறிய நிறைய தேடல்களை நாடினான். மக்களிடையே கோறணி நச்சில் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் நிறைய கருத்துகளை பதிவு செய்தான்.
புதாக்க முயற்சியாக ஒரு காணொளியைத் தயாரித்தான். முகக்கவரி மற்றும் கைத்தூய்மியை பயன்படுத்தும் அவசியத்தையும் தெளிவுப்படுத்தியது மட்டுமல்லாது இயற்கையோடு நாம் நட்போடும் அன்போடும் இருக்க வேண்டும். இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு காலகட்டத்தில் காற்றுத் தூய்மைக்கேடு ஆறும் சுத்தமாகியுள்ளது, ஆமைகளும் கடலுக்குள் சென்று முட்டை போடத் தொடங்கிவிட்டன. மாற்றம் என்பது நம்மிடமிருந்து வர வேண்டும் என்பதை அக்காணொளியின் வழி தெளிவுப்படுத்தினான் குமரன். குமரனின் அந்தக் காணொளி இறுதிச் சுற்றுவரை தேர்வு பெற்றது.
இறுதிச்சுற்றுக்கு தேர்வு பெற்ற காணொளிகள் அனைத்தும் பொது நிலைப் பார்வைக்காக இணையத்தில் வலையொளி தளத்தின் வாயிலாக மதிப்பீடு செய்யப்பட்டது. அதிக பெரும்பாண்மை புள்ளிகளில், குமரனின் காணொளி முதலிடத்தைப் பெற்றது.
அந்தக் காணொளியைக் கண்டுகளித்த அனைத்து தரப்பினரிடமிருந்தும் குமரனுக்கு பாராட்டுகள் குவிந்தன. முதல் இடத்தைப் பெற்றதற்கான ரொக்கத் தொகையும் குமரனுக்கு வழங்கப்பட்டது. குமரனின் பெற்றோர்களும் எனது வெற்றியைக் கண்டு உச்சிக் குளிர்ந்தனர்.
அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அன்பு என்பதை நன்கு உணர்ந்திருந்தான் குமரன். அதனால், இந்த கோவிட்-19-நடமாட்ட கட்டுப்பாட்டில் நன்மை தரும் செயலில் ஈடுபடும் வகையில் குமரன் தனக்கு கிடைத்த பணத்தைக் கொண்டு சேர்ந்து உண்ண ஊனவின்றி உடுத்த உடையின் படுக்க பாயின்றி தவிக்கும் ஏழை எளியோருக்கு உதவி செய்தான். அந்த ஏழைகளின் கண்களின் நன்றியுணர்வு பிரதிபலித்தது. இதன் வழி அன்பு என்பது ஒவ்வொரு வினாடியும் தொடர்ந்திட வேண்டும் என்பதை உணர்ந்தான் குமரன்.அவனுடைய அன்பான குணத்தைக் கண்டு பெற்றோரும் அகமகிழ்ந்தனர்.
'உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம் ,பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே என்பதை உணர வைத்து இந்த கோவிட்-19 பெருந்தொற்று.