REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Priya Balaji - India

Entry No: 

333

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

நெற்களத்துக் காதல்

திருவின் இருப்பிடமே வளங்கள் அருகில் நீ இருக்க
பெண்ணே

உன்னிடம் அனைத்து வளமும் இன்று நான் பெற்றேன்
நமக்கு இந்த களத்து மேட்டின் வாசம் வண்ணத்துப்பூச்சிகளாய் இனிய கனவுகள் உன்னிடம் வந்ததம்மா...

எனக்கும் காதல்
எனக்கு தாய் உண்டு தகப்பன் உண்டு
என் உழைப்பே ஊதியமாய் வளமான வாழ்வுண்டு

என் அன்னை பணம் சேர்த்தாள் நகை சேர்த்தாள் பதவிசாய் வாழ்ந்திருக்க...
பட்டு வெள்ளி பாத்திரம் என்று அழகழகாய் அன்பைக்காட்ட அவளிருக்க எனக்கென்ன
வட்டமிடும்
என் கருவிழியில் அவள் பாசம் மட்டுமே......
என் சுவாசம் என்றும் அவள் எண்ணங்களே

தன் மகளை வாழ்விக்க அவள் நினைவே வசந்தம்
அத்தனையும் கலைத்து விட்டு
அன்பாய் உன் நட்பையும் உதறி விட்டு
காதல் என்று சாயம் போட்டு நான் வாழ அறிவற்ற விலங்கல்ல
என் மனவாசல் என்றும் நட்பிற்கே திறந்திருக்கும்