REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Prince Mathew - India
Entry No:
40
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதல்
என்னவளே,
முதன்முதலில் உன்னைக் கண்டவுடன் என் சுற்றுப்புறங்களும் சூன்யமாகிப் போனது ஏனோ?
உன்னைப் பார்த்த பிறகே அறிந்தேன்,உயிரும் உடலும் வேறென்று.
உடல் மட்டும் இங்கிருக்க உயிர் மட்டும் உன்னை சுற்றுகிறது ஏனோ?
வகுப்பறையில் நீ அமர்ந்திருக்க உன் காதோரம் ஒற்றை முடி கழுத்தில் தீண்டும் கவிதையை விடவா நான் ஒன்றை படைத்துவிடப் போகிறேன்?
ஏதோ ஒரு கணத்தில் நீ விரித்த இதழ்களை என் விழிகள் படம் பிடித்து இதய அறையில் இன்னிசையுடன் ஒளித்து வைத்திருக்கிறது.
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.உன்னை விட்டு பிரியும் மாலை ஏன் விரைகிறது என்றும்,
உன்னைக் காணும் காலை ஏன் நீள்கிறது என்றும்.
தேடித் தான் கண்டு பிடித்தேன் உன்னை.
தேடிக்கொண்டே இருக்கிறேன் உன்னுள் தொலைந்த என்னை.
என் ஜீவன் நீங்கும் முன்
என் மனதை பார்ப்பாயோ?
என்னை நீ மணப்பாயோ?
***********************************