REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
PRAVEEN KUMAR.K - India
Entry No:
427
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதல் :
காதலியே..!
கனவிலும் நினைக்கவில்லை
உன்னை பார்ப்பேன் என்று......
கனவில் மட்டுமே உன்னை
காதலிப்பேன் என்று...
புரிந்தது இன்று....
பல நேரத்திலும் உன்னை
நினைப்பது உண்டு.....
உன்னை நினைப்பதால் மட்டுமே
என் வாழ்க்கை இனிமையாக
போவதுண்டு.....
இரவிலும் இமையை திறக்க
திணறியதுண்டு......
திறந்தால் நீ இருக்கமாட்டாயோ
என்று.....
ஒளிந்து இருந்து பார்க்கும்போதே உணர்கிறேன்
இது ஒருதலை காதல் என்று....
இருளிலும் இடைவிடாமல் தேடுகிறேன் எங்கே ஒளி
என்று அல்ல....
ஒளியாய் ஒளிரும் ஒளிச்சுடர்
நீ எங்கே என்று.....
நித்தமும் உன்னை நினைத்து
பாடப்புத்தகம் ஒன்றை இயற்றவேண்டும் நன்று.....
அதில் பக்கம் பக்கமாய் உன்
நினைவலைகளை நான் பதிக்க
வேண்டும் அன்று....
எப்பொழுதும் உன்னை மட்டுமே
நினைக்கும் பாக்கியம் எனக்கு
கிடைக்க வேண்டும் என்று.....
அப்படி கிடைத்ததாலோ என்னவோ மூன்று முடிச்சு போடாமலே முதியவன்
ஆனேன் இன்று....
நித்திரையிலும் உன் நினைவு நீங்கா முத்திரையை நான்
குத்திட வேண்டும் என்று......
உன்னை பார்க்கவில்லை என்றால் சுலபமாக போகாது
அந்நாள் அன்று.....
அப்போது நானும் நினைப்பதுண்டு......
இதுவோ என் இறுதிநாள் என்று.....
இப்படிக்கு:
நித்தமும் உன்னை நினைத்து
நிழலாய் நிலைத்திருப்பவன்....
கா.பிரவீன்குமார்
கோவை.