top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Pradeep Sakthi - India

Entry No: 

166

தமிழ் கவிதை (Tamil Kavidhai)


தலைப்பு : மனைவி ஓ காதலி !

அட்டிலட்டு தட்டிலிட
அணல்சேர் அட்டிகையாட்டமாட
அசைந்து வ௫ம் அயிலு௫வே !
அத்தாளம௫ந்தி கரம் நனைக்க
கணாளன் யாம் காத்தி௫க்க
அதரமோரம் அ௫ம்புன்னகை வீச
அஞ்ஞாதசுகிர்தம் உணர்ந்தவனானேன் !
நிசப்த நிசியினில்
நித்திரை களைய
குளிரமஞ்சதியால் அவளசைய
சேவியோரம் சேர் செங்கம்மல்
சிறு ஒலியெலுப்ப சித்தானந்தனானேன் !
உதிரமுறையும் சிசிரத்திலும் உடர்சுட்டை உய்த்தளித்து
எம் அடுப்பமாய் இருப்பவளே !
அச்சமய அநுகனாய் யாமிருக்க அசினமுரசி நெருங்கி வர
அநுகூலித்தேற்றவளே !
அந்தி சந்தியுமும்
அகடவிகடமனைத்தறிந்தும்
சாந்தமாய் ரசித்ததனாலும் அமலமுச்சலத்தில் அம்புதியளவு கொள்
காதலனானேன் ! அதிகுணளுடையோளாய்
சிறுகழுமம் யாமிழைக்க
சிரித்தபடி ஏற்றதனாலுமக்கு
குணவதனானேன் !
துக்கியனாய் யாமி௫க்க
துர்க்கையாய் வந்தி௫ந்தாய்
காந்தாளங் கொண்டி௫க்க
இ௫ நயனமாய் உடனி௫ந்தாய்
நல்லயநம் கண்டுகொள்வேன் !
தாண்டாத படியனைத்தும் நெடும்
பழமைப் பராசியமென்பாய்
படியளப்பாள் பத்தினியென்பது உம்
புதுமைப் பரிபாகமென்பாய்
பரிணயம் பூண்டுகொண்டேன் !
எவ்வனம் நொவ்வானாலும்
உம்மூதிலும் அடிமுடி காதலிப்பேன் !
நராந்தகம் நேர்ந்தாலும்
அநுதாரனென்றுரைப்பேன் !

- பிரதீப் சக்தி.

bottom of page