REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
PR Vaidegi - India
Entry No:
102
தமிழ் கதை (Tamil Kadhai)
அன்புள்ளம்
அண்ணன் தம்பி யென்றால்
அவன் பங்காளி
அடிச்சிபிடிச்சிகாமே
ஐந்து அடி தள்ளி நின்றால்
அவன் எப்பவுமே தோழன் தான்
இதுவே உலக வழக்கென்றால்
எல்லா விதிக்கும் ஒரு விலக்குண்டு இதுவும் ஒரு உலகு வழக்குதான்
கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் ஶ்ரீராம்
வேலை வாய்ப்பு நகரத்தில்
பிறகு அவனும் நகரவாசிதான்
தன் மகளை தடவி தடவி வளர்த்தான்
ஆங்கில மோகம் கொஞ்சம் அதிகம்தான்
எனக்கு கிடைக்காத மேலை நாட்டு கல்வி மகனுக்கு நான் தருவேன் என்ற ஆர்வம்
ஆறிலக்க செலவீனம் ஆறாக பெருகிற்று
தனது சேமிப்பு எல்லாமே.
மனையின் நகைகள் கரன்ஸியாச்சு.
அலுவலக கடன், வங்கிக்கடன் நண்பர்கள் கைமாற்று
வழக்காக செய்வது தான் இன்னும் போதலையே இரவு முழுவதும் யோசனைதான் என்ன செய்யலாம் காலையில் ஓர் பரபரப்பு காகம் கரைகிறது வருவராமே எது எப்படியோ பயணத்தை நிறுத்த முடியாது ரயிலேறி பயணித்து இறங்கியதும் எதிர்ப்பட்டவர் எனது தம்பி லக்ஷ்மண்ஜி
இளவலின்வாசமல்லாம் கிராமமே
தனக்கென்று பிடிச்ச வேலை விவசாயந்தான்
பெற்றோரோடே தன் குடும்பம் உழைப்பார் உழைப்பார் அப்படிஉழைப்பார்
ஏற்றமும் இறக்கமும் தானே விவசாயம்
எங்கே நின்னாலும் எப்பவும் அண்ணன் நினைவு தான் நின்று நிதானித்து யோசித்து அண்ணனைப் பார்க்க
இளவலும் ஆவலாய் சென்னை ரயில் அருகில்
ஏற்பாரா ஏற்க மாட்டாரா என்ன சொல்வார்
ஆச்சரியம்! அருகருகே
அண்ணன் இறங்கு கிறார்
ஏதேதோ பேசி விட்டு மெதுவாய்
அண்ணன் தன் பணத்தேவையை...... மென்று விழுங்குகிறார்
தம்பியும் கேட்டவுடன், அண்ணாஎனக்குத் தெரியாதா நம் வீட்டிலேயே
அதிகபடிப்பு என்அண்ணன் மகன் தான்
கவலையை விடு அண்ணே
என் மக்க தலையெடுக்க ஏழெட்டு ஆண்டாகும்
இப்ப கொஞ்சம் விவசாயம் கட்டை தான்
இருந்தாலும் போனமூணு வருஷம்மூணு மடங்கு ஆச்சுண்ணே
அதுதான் இருக்கே தாராளமா
இந்தாங்க மஞ்ச ப்பை
கை மாறிச்சு அண்ணன் கண்ணில் தண்ணீர்
அப்பா இதுக்குத்தான் நமக்கு
ராம் லக்ஷ்மண் என்று பேர் வச்சாரா ஏதோ நினைவுகள் அண்ணனுக்கு பேச வார்த்தைகள் இல்லை
எப்பவும் இருக்கும் சகோதர அன்பு
அதை அசைக்கவும் முடியாது ஆழம் பார்க்கவும் முடியாது விடுங்க இதுவும் பாசமலர்தான்