REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
padmanabhan ramachandran - India
Entry No:
12
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அழகு
பார்வையில் அழகிருந்தால்
பார்ப்பதெல்லாம் அழகுதான் !
வானிலிருந்து வீழுகின்ற மழைத் துளியும் அழகுதான் !
மாலையிலே தோன்றுகின்ற சந்திரனும் அழகுதான் !
தென்றலிலே வீசுகின்ற வாசமுமே
அழகுதான் !
புல்லின்மீது வீற்றிருக்கும் பனித்துளியும் அழகுதான் !
தோன்றி மறையும் சூரியனின் கதிர் களுமே அழகுதான் !
இருட்டில் மின்னிடும் பூச்சி கூட
அழகுதான் !
பார்வையில் அழகிருந்தால்
பார்ப்பதெல்லாம் அழகுதான் !
கதிர் அறுக்கும் அரிவாளைக் காண்பதுவும் அழகுதான் !
மாடுகட்டி ஏர் ஓட்டும் உழவனுமே
அழகுதான் !
பரம்படிக்கும் மாடுகூட பார்க்கையிலே
அழகுதான் !
நாற்றுக்கட்டி நடவு செய்யும் நாட்களுமே
அழகுதான் !
பயிர்நடுவில் களைபிடுங்கும் கரங்களுமே அழகுதான் !
பச்சை பட்டாடையில் வயல் வரப்பும்
அழகுதான் !
கதிர் அறுத்துக் கட்டி செல்லும் காட்சியுமே அழகுதான் !
களத்து மேட்டில் நெல் மிதிக்கும் எருதுகூட அழகுதான் !
பதர்தன்னை தூசித்தட்டும் பாங்குகூட
அழகுதான் !
வியர்வையோடு சாப்பிடும் அச்சீனிக்கிழங்குமே அழகுதான் !
பார்வையில் அழகிருந்தால்
பார்ப்பதெல்லாம் அழகுதான் !
நெல்லை பத்மநாபன்
செல் :9487703343.