top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

P.TAMIL MANI - India

Entry No: 

523

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

"காதல் ". உலகம் தோன்றிய காலம் முதல் அழியாத உறவே காதல்..... கண்ணில் மலர்ந்து கல்லறை வரை தொடரும் உறவேகாதல்....சாதிகள் பல கடந்து சமத்துவத்தின் திறவுகோல் இந்த காதல்.... உறவுகள் பல பிரிந்தாலும் படைத்தவனே சொன்னாலும் கைவிடபடாததே இந்த காதல்.... நித்தமும் நித்திரையை தொலைத்து சித்தம் கலங்கி உயிரில் உலாவும் இந்த காதல்..... உறவுகளை எதிர்த்து உயிரையே காணிக்கையாக்கும் இந்த காதல்... அகம் மகிழ்ந்து எதையும் எதிர்பார்க்காமல் வருவதே இந்த காதல் ‌‌...
என்னுள் இருக்கும்
என்னவளே என் இதயத்தை இயக்கும் இனியவளே!! உன் வருகைக்காக ஏங்கும் என் எதிர்காலமே!! உன்னை நினைத்து நித்தமும் நித்திரையை தொலைத்தேனே!!உன்னை காதலால் கரம்பிடித்தால் என் வாழ்வு வசந்தமாகும்!! உன்னை மணம் முடிக்காத நிலை வருமாயின் அன்று என் வாழ்வின் இறுதி நாளாகும்.......
நீல கடலின் நீங்காத அலை நீ.... நினைவாலே தினமும் என்னை வருடும் நித்திரை நீ.... என்னை முற்பொழுதும் ஆளும் மூச்சு காற்று நீ...இரவின் மடியில் தாலாட்டும் இனிய இசை நீ....வாழ்வின் நீங்கா அங்கம் வகிக்கும் என் நெஞ்சம் நீ..... இந்த உலகமே நம் காதலை எதிர்த்தாலும் என் உதிரம் சிந்தி உன்னை கரம்பிடிப்பேன்.........

bottom of page