REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Nivetha Krishnan - India
Entry No:
59
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
இதயத்தில் உன்னை நினைத்தேன்,
உதிரத்தில் நிலைத்தாய்...
ஆறாது வடு ஆக்கினாய்,
மன்னித்தேன்...
மறக்க முயன்றேன்...
நினைவுகளை ஆழமாக பதித்தாய்...
திரும்பிய இடம் எல்லாம் உன் முகம்,
திருந்தி வருவாய் என்றேன்,
காலம் கடந்தது.......
நினைக்க நினைக்க தெவிட்டாத நினைவுகள்...
நம் காதல்....
தெகட்ட தெகட்ட உன்னை காதலித்து,
என்னை நானே தண்டித்தேன்.
நினைவு இருக்கும் வரை என்றென்றும்,
நம் காதல் நினைவுகளுடன்,
மனம் கலங்கி நிற்கும் ஒவ்வொரு நொடியும்..
மனசெல்லாம் றெக்கை விரியச் செய்யும் உன் முகம்..
விழி கலங்கியதும்
இதழ் விரியும்
உன் நினைவுகளால்....
என் அமுதே,
உடல் இன்றி உயிர் ஊட்ட முடியுமோ?
உயிர் ஊட்டினேன்
நம் காதலுக்கு
என் கனாவில்
நீ,
நான்,
நாம்...
என் இறுதி மூச்சு
உன் மடியில் தவழ வேண்டும்...
என் மரண படுக்கையிலும்
உன் மார்பினில் புதைந்திட வேண்டும்...
என் கடைப் பார்வைக்கு
உன் விழி மருந்தானால்
மரணத்தையும் வென்று ஜனனித்து வருவேன்....
உன் உயிரினில் கலந்திட.....