REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
nithyapriya ravichandran - India
Entry No:
99
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
நானே நீயடா!
என்றும் இறுக்கின்றாய்!
நீ
என்னுள் இருக்கின்றாய்!
கண்ணீருடன் வீழ்ந்தாலும்!
புன்னகையுடன் எழுந்தாலும்!
பிறர் என்மீது எச்சில் உமிழ்ந்தாலும்!
கீரீடத்துடன் பல்லக்கில் அமர்ந்தாலும்!
எந் நிலைக்கு நான் உயர்ந்தாலும்!
இல்லை
இந்நிலையிலேயே மடிந்தாலும்!
எங்கும் நீயடா!
எல்லாம் நீயடா!
உன்னால் நானடா!
உன்முகம் தேக்கி வைத்த கண்களில்
நினைவுகளும் நீராக
வழிகின்றது!
வலிக்கின்றது!
தடுமாற்றம் காண்கிறேன்!
கோபம் தலைஏற நிற்கின்றேன்!
நெடு தூரம் நடக்கின்றேன்!
இந்நிலை மாற கேட்கின்றேன்!
மீண்டும்
உன் சிறுவிரல் பிடிக்க
இந்த
சிறுகைகள் உலகையும் வென்றிடும்!
நடுகடலில் இன்று நானே
நீந்த தெரியாய மீனே!
படகாய் நீ வந்தால் உன்பாதம் பனிவேனே!
காட்டு தீயில் கருகும் ஒர் மரம் போல நானே!
மழையாய் நீ வந்தால் வாழ்வு பெறுவேனே!
பூக்கள் மண்ணில்
வீழ்வதெல்லாம்
அதன் வேரை சேர்ந்திடத்தானோ!
பூவாய் இன்று நானே
என் வேரை கேட்கின்றேனே!
உன்நினைவுகளினாலே
இன் நிலையை அடைந்தேனே!
புயல் வீசும் போதும் ஒர் புன்னகை கேட்கின்றேனே!
என்னை தாங்கி பிடிக்கும்
தாயும் நீயடா!
என் மனம் புரிந்த நண்பன் நீயடா!
என்னுள் இருக்கும் மனிதன் நீயடா!
நான் அனு தினமும் வணங்கும் இறைவன் நீயடா!
நானே நீயடா!