REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Nithya Shree - India
Entry No:
86
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
இலட்சியம்
என் கண்களில் இலட்சியத்தை
கண்டேன்
சில நேரம் பயத்தால்
காலங்களை கடந்தேன்!
பல நேரம் தோல்வியே
தழுவினேன்
அதை நோக்கி போகும் வழிகள்
தெரியவில்லை!
அதை ஒவ்வொரு நொடியும்
நினைத்து மனம்.
அடங்கவில்லை!
மனம் சொல்வதை கேட்டு
வீழ்ந்து எழுந்தேன்
அவமானங்களை பார்த்து
சகித்து போனேன்!
அதை ஏற்றுக்கொண்டு
பாடங்களை கற்றேன்
என் எழுத்துக்கு உயிர்
கொடுத்தேன்!
அந்த எழுத்தை மனதில் இருந்து
வரவழைத்தேன்!
இதுவே ஒரு கவிஞனின்
இலட்சியம் என்றேன்!
இலட்சியம் என்பது
போராடி கிடைப்பது தான்!
என்று வாழ்க்கைக்கே
புரியவைத்தேன்