REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Nithya Lakshmi - India

Entry No: 

517

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

பெண்

பெண்ணே நீ துணிந்து நில்
போராட கற்றுக் கொள்வதற்கு!!
பெண்ணே நீ வானவில்லாய் மாறு
துன்பங்கள் வரும் போது
வில்லாய் வளைந்து கொடுப்பதற்கு!!
பெண்ணே நீ புயலாய் மாறு
உன்னை சீண்டுபவர்களை சீறுவதற்கு!!
பெண்ணே நீ தென்றலாய் வீசு
உன்னை நம்பியவர்களை தாலாட்டுவதற்கு!!
பெண்ணே நீ பூமாதேவியாக மாறு
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
பொறுத்துக்கொள்வதற்கு!!
பெண்ணே நீ அன்னையாக மாறு
பாசத்தை பகிர்ந்து கொள்வதற்கு!!
நீ தென்றலாகவும் வருவாய்
புயலாகவும் மாறுவாய் என்று
எத்தனை பேருக்கு தெரியும்
சிறகடித்து றெக்கை விரித்து
பறந்து செல்
பெண் என்பவள்
யாதுமாகி நிற்பாள் என்று!!!!