top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Naveen Jayakumar - India

Entry No: 

230

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல்….
கண்டவரை கண்டநொடி - கண்கள்
மயங்கி வீழ்வது காதலன்று.

உன்னவரை உள்ளத்தால்
கண்டுகொண்ட அந்த நொடி
ஆத்மார்தமாய் இதயத்தில்
துளிர்விடும் உணர்வே காதல்.

‌ அன்பின் ஆழம் காதல்
அகிலம் இயங்க காரணமே காதல்.

வேயுடைத்த குழல் பூங்காற்றுடன்
கொள்ளும் காதல் - அதனால்
விளையும் மனம் மயக்கும் பாடல்.

மண்ணுடைத்த ஊற்றொன்று ; கல்லுடைத்து , மலையுடைத்து ; ஆர்ப்பரித்து , கரைபுரண்டு ஆற்றாகி
கடலில் கலைவது காதல்.

நிலவோடு இரவில் உலாவரும் விண்மீனோ
என்னவனை தவிர வேறெவரும் காணாதிருக்க
பகல் மறைவதும் காதல்.

சின்னஞ்சிறு காதல் தேனீக்கள்
காதல் தேனால் - சிறுகசிறுக
சேர்த்து கட்டிய காதல் கூடவே
இவ்வுலகம்….!
- நவீன்

bottom of page