top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Nathiya Subramani - India

Entry No: 

528

தமிழ் கதை (Tamil Kadhai)

அன்பே எந்தன் அன்பு செல்வி !!


காலை ஐந்து மணி புலராத வானம் பட்சிக்களின் பாஷை கூட ஒரு வித இசையாக மாறிபோனது அந்த காலைப் பொழுதில் சூரியன் மெதுவாக மேலே வர அவனின் காதலி நிலா ஏக்கத்துடனே நகர்கிறாள் தன்னவனின் புறக்கணிப்பால் . அந்த பொழுதில் அந்த பெரிய கேட் வீட்டின் முன் மங்கையவள் கோலம் போடும் அழகை அந்த வீட்டில் வேலை பார்க்கும் வேலம்மாள் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். வேலம்மா , மா இந்த அழகை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது அம்புட்டு அழகா இருக்கு என்று நெட்டி முறித்தார்.அவளோ அழகாக தன் சிங்கப்பல் தெரிய சிரித்தாள். அங்கு வந்த அற்புதம்மாள் ஒரு புள்ள பெத்து தர வக்கில்ல அழகாமா அழகு என்று மே வாயை தோள்களில் இடித்துக் கொண்டு உள்ளே போனாள். அங்கு எந்த உணர்வும் காட்டாமல் நின்றிருந்தாள் அன்புசெல்வி நம் கதையின் நாயகி . அற்புதம்மாள் உள்ளிருந்தவாறே ஏய் சீக்கிரம் காபி கொண்டு வா என்று கத்தினாள். வேலம்மாள் இந்தம்மா எப்போ தான் திருந்த போகுதோ என நினைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

அன்பு பெயருக்கு ஏற்றார் போல் அன்பானவள் . அமைதியான குணம். அந்த வீட்டின் மூத்த மருமகள்.

வீட்டில் நுழைந்த அன்புவோ பரபரப்பாக இயங்கி அனைவருக்கும் டீ காபி என தனித்தனியாக தயார் செய்து வேலம்மாளிடம் கொடுத்து விட்டாள். பின் சமையல் வேலையில் இறங்கினாள். பாதி வேலை முடிந்தவுடன் வேலம்மாள் கண்ணு நீ போய் ரெடியாகு நான் பாத்துக்கிறேன் என பிடிவாதமாக வெளியேற்றினாள் அவளை . தினமும் நடக்கும் இது.

அறைக்கு வந்த அன்பு மணியை பார்க்க ஏழு என காட்டியது .அன்பு ஐயையோ டைம் ஆச்சு என புலம்பியவறே கண்ணாடி முன் நின்று கிளம்பிக் கொண்டிருந்தாள்.அப்போது கை தெரியாமல் சென்ட் பாட்டில் மீது பட அது கீழே விழுந்த சத்தத்தில் எழுந்தான் சந்துரு . சந்துரு ஏய் அறிவு இல்ல நிம்மதியா தூங்க முடியுதா இந்த வீட்டிலே . முதல்ல என்னை கல்யாணம் பண்ணி என வாழ்க்கையில் நிம்மதிய கெடுத்த இப்போ என் தூக்கத்தை கெடுக்கிற ச்சை எப்போ தான் ஒழிவியோ என்று குளியலறை நோக்கி சென்றான். அன்பு கண்களில் கண்ணீருடன் அவர்களின் திருமண புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். பெருமூச்சு ஒன்றை உதிர்த்தாள்.

சந்துரு , மென்பொருள் இன்ஞ்சினியர் . ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான். அன்பு – சந்துரு இருவருக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்தது. ஆனால் அன்பு , காதல் என்ற ஒன்று இதுவரை இருவருக்குள்ளும் இல்லை . சந்துரு தன் தந்தையின் சொல்படி மட்டுமே அவளை திருமணம் செய்து கொண்டான். ஏனோ அவளை மனைவியாக ஏற்க மனம் மறுத்துவிட்டது அதற்கு காரணம் தியா அவனுடன் பணிபுரிபவள் . நட்பாக பழக ஆரம்பித்த மூன்றாம் மாதம் அவளோ காதலென வர இவனும் அடுத்த கட்ட காதல் என்றதை ஏற்றான். காதலித்தவள் இருக்க வேண்டிய இடத்தில் அன்பு இருப்பதால் அவளை அடியோடு வெறுத்தான். அனுதினமும் அவளை வார்த்தை என்னும் ஆயுதத்தால் வதைத்தான். அற்புதம்மாளுக்கோ தன் மகனை பெரிய இடத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஆனால் அது நிராசையானது தன் கணவனால். அந்த கோபம் முழுவதும் அன்பு மீது திரும்பியது. அதன் விளைவு டிவோர்ஸ் வரை வந்து விட்டது. இன்று அதன் இரண்டாவது வாய்தா.

அன்பு பரபரப்பாக கிளம்பி கீழே வர அவளின் மாமனார் ஆறுமுகம் ஷோபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அன்புவோ குட் மார்னிங் மாமா என்று புன்னகைக்க அவரோ வருத்தத்துடன் அவளை நோக்கி என்னை மன்னிச்சுரு மா நானே உன் வாழ்க்கைய கெடுத்துடனே என்று கண்கலங்க அன்பு மாமா அப்படி எல்லாம் ஒன்னுமில்ல எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்.என்று கிளம்ப எத்தனிக்க அன்பு சாப்பிட்டு போ மா என வேலம்மாள் கூற அன்பு இல்லை மா வேணா எனக்கு நேரமாச்சு என்று பேருந்து நிலையம் நோக்கி ஒடினாள்.
அன்பு , சந்துரு இருவரும் ஒரே நேரத்தில் கோர்ட் உள்ளே நுழைந்தனர். சந்துரு அவளைப் பார்த்து முறைத்தான். அன்பு அமைதியாக நின்றிருந்தாள். இவர்களை உள்ளே அழைக்க சென்றனர். அங்கு ஐம்பது வயது மதிக்கதக்க பெண்னொருவள் இருந்தார். அவர் உட்காருங்க உங்களுக்கு கொடுத்த கெடு முடிஞ்சது இப்போ என்ன முடிவு பண்ணி இருக்கிங்க என்று வினவ சந்துரு மேடம் என்னால இதுக்கு மேல என்னால இவ கூட வாழ முடியாது எனக்கு டிவோர்ஸ் தான் வேணும் என்க அன்பு அமைதியாக இருந்தாள். அவளை கேட்க அவளோ அவரோட விருப்பம் தான் என் விருப்பமும் எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை என்றாள். அந்த பெண்மணி ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு சரிமா எதாச்சும் ஜீவம்சம் வேணுமா அன்பு எதுவும் வேண்டாம் மேடம் என்று கூறிவிட்டாள். அங்கிருக்க பிடிக்காமல் வெளியே சென்று விடடாள். அந்த பெண்மணி எல்லா பார்மாலிட்டிஸிம் முடிய லேட் ஆகும் அதுவரை வைட் பண்ணுங்க.


அன்று மாலை பூங்காவில் அன்பு தனியாக உட்கார்ந்து இருந்தாள். சிறிது நேரம் கழித்து அவளின் தோழி தாரா அங்கு வந்தாள். அன்பு ரொம்ப காக்க வைச்சுட்டனா என வினவ . அன்பு இல்லை டி சரி நான் சொன்னது என்னாச்சு ரெடியா. தாரா எல்லாம் ரெடி தான். ஆமா நீ ஏன் இந்த முடிவு எடுத்த பேசாம அம்மா வீட்டிலேயே இருக்கலாம்ல . அன்பு இல்ல டி அங்க தங்கச்சி புகுந்த வீட்டில இதை வைச்சு பிரச்சனை பண்ணுவங்களோன்னு பயப்படுறாங்க அதான் நான் ஹாஸ்டலே போலாம்ன்னு . தாரா இருந்தாலும் அவங்களை விட்டு கொடுக்க மாட்டியே என்று கூற.அன்பு சிரித்துக் கொண்டே நம்ம குடும்பம் டி . தாரா ம்கூம் அவங்க தானே உன்ன பெத்தாங்க என்னைக்காச்சும் உன்னை சந்தோஷப் படுத்தி பாத்து இருப்பாங்களா . இல்லை ஆறுதலா தான் பேசி இருப்பாங்களா.தாரா சரி அது எல்லாம் இருக்கட்டும் நீ ஏன் டி ஆஸ்திரேலியா போற இங்கயே இருக்கலாம்ல அன்பு இல்லை டி இங்க வேணாம் நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல நானும் குழந்தைகளும் அங்கயே போய் இருக்கோம். தாரா மேலும் காயப்புடத்த விரும்பாமல் சரி டி ஆனா நான் என் டார்லிங்க மிஸ் பண்ணுவ என்க. அன்பு நானும் தான் சசிறிது நேரத்தில் கலகலப்பாக . தாரா அன்பு உன்ன இப்படி சிரிச்சு பாத்து எவ்வளவு நாளாச்சு . அன்பு சரி டி நேரமாச்சு கிளம்புற என விடை பெற்று சென்றாள்.


ஒரு வாரம் கழித்து காலை சந்துரு அவசர அவசரமாக தயாராகி வெளியே வந்தான். அன்புவும் வர அவளை பார்த்துக் கொண்டே வந்து கார்ல ஏறு என அதிகாரமாக கூற அவனை ஏற இறங்க பார்த்தவள் அப்படியே நிற்க இப்போ நீ வரப்போறயா இல்லையா என.மிரட்ட அவள் தலை தானாக ஆடியது.

இருவரும் ஏற கார் வேகமாக ஒர் அனாதை இல்லத்தை முன்பு நின்றது. சந்துரு இறங்கு என கூற அன்பு அமைதியாக இறங்கினாள். உள்ளே செல்ல அங்கு ஸ்டெல்லா சிஸ்டர் இவர்களுக்காக காத்திருந்தார். அங்கு சந்துரு அன்பு நுழைய கார்த்தி என்ற மூன்று வயது ஆண் குழந்தை அப்பா அம்மா வந்தாச்சு என ஒடி வந்து சந்துரு கால்களை கட்டிக் கொண்டான். அன்பு கண்களில் கண்ணீருடன் அவனை பார்க்க அவனோ அவன் தமையனை கொஞ்சிக்கொண்டிருந்தான். அப்போது ஸ்டெல்லா சிஸ்டர் அன்புவிடம் மகிழினி என்ற பெண் குழந்தையை கொடுத்தார். கார்த்தி அப்பா நான் தங்கச்சி பாப்பாவ சமத்தா பாத்துகிட்டேன் வேணா சிஸ்ணர் கிட்ட கேட்டு பாருங்க என்க . அன்பு வார்த்தைகளின்றி நிற்க . ஸ்டெல்லா சிஸ்டர்
அன்பு சந்துரு இங்க வந்து எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாரு மா என்க . சந்துரு ஆதரவாக அணைத்துக் கொண்டான். அன்பு சிஸ்டரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு வெளியே ஓட சந்துரு அவள் பின்னே வந்தான். ஒரு மரத்தின் கீழ் அவள் நிற்க. சந்துரு வந்து அவள் தோளை தொட அவள் அவனை இறுக அணைத்திருந்தாள். அவனும் தன் நெஞ்சில் இறுக பற்றிக் கொண்டான். சிறிது நேரம் கழித்து அங்குள்ள பெஞ்சில் அவளை தோளோடு அணைத்து பேச ஆரம்பித்தான். அன்பு மா ஐ யம் ரியாலி சாரி செல்லம் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்ட. என கண்கலங்க அன்பு அவனின் கண்ணீரை துடைத்து இல்லைங்க நான் தான் தப்பு என் நிலமை தெரிஞ்சும் உங்க வாழ்கையில் வந்து இருக்க கூடாது என்று தேம்ப அவளின் வாயை பொத்தியவன். நீ என் தேவதை டி உன்ன தொலைக்க பாத்த பாவி டி நான். அன்னைக்கு உன் ப்ரண்ட் கிட்ட பேசுனத நான் கேட்ட நீ போறேன்னு சொன்ன அப்போ யாரோ என் உயிரை பிடிங்கிட்டு போற மாதிரி இருந்துச்சு . அப்போ தான் எல்லாத்தையும் யோசிச்ச இதுவே எனக்கு இப்படி இருந்தா நீ என்னை விட்டு போய் இருப்பியான்னு அப்போதான் நான் உன்னை எவ்வளவு விரும்புனன்னு எனக்கு தெரிய வந்தது . உடனே உன் ப்ரண்ட் வீட்டுக்கு போன எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்ட . அப்போவே முடிவு பண்ணிட்ட இனி வாழ்ந்தாலும் செத்தாலும் உன் கூடவும் நம்ம குழந்தைக கூடவும் இருக்கணும்ன்னு . ஊரு.ஆயிரம் பேசிட்டு போகட்டும் யார் ஏத்துக்கலான்னாலும் பரவா இல்லை உங்க மூணு பேருத்தையும் விட கூடதுன்னு . இப்போ சொல்றேன் டி இது வரைக்கும் நான் எப்படியோ புத்தி கெட்டு போய் இருந்துட்ட இனி உன்னையும் நம்ம குழந்தைகளையும் நல்லா பாத்துப்பேன்னு தோணுச்சுனா என் கூட வா . அப்படி தோணலைன்னா உங்களை தூரத்துல இருந்து பாக்கிற பாக்கியத்தையாவது கொடு . என்று கண்களில் கண்ணீருடன் சொல்லி முடித்து . உன் பதிலுக்காக காத்திருப்பேன் என்று எழுந்து நடக்க . அன்புவோ ஐ லவ் யூ சண்டி என்று உற்க்க கத்தினாள். சந்தரு கண்களில் ஆனந்த கண்ணீர்.

யாரைப் பற்றியும் நினைக்காமால் அவர்களின் வானில் சிறகடித்து பறக்கும் காதல் பறவைகளாக தங்களின் பயணத்தை தொடங்கினர்.

bottom of page