REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
NATARAJAN A - India
Entry No:
164
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பு
இது ஒரு பாதை....
இதன் பயணம் மிகவும் அழகானது!
மகிழ்வும்...மனவலியும்...
இந்த பயணத்தின் இரவும்! பகலாக!
அழும் குழந்தைக்கு...
அன்னை தரும் அரு(வ) மருந்து!
ஆசைகளை தோற்கடிக்கவல்லது...
எண்ணத்தில் இதை நிரப்பி கொள்...
எல்லாம் நலமே! எல்லோர்க்கும் வளமே!!
இதை மட்டும்! இறுக பற்றிக்கொள்...
வசை பாட வைத்த வாழ்க்கை கூட!
இனிமையாய் தெரியும்...
இது தான் உண்மையென புரியும்...
பேச்சில் அன்பை நிறைத்துவிடு...
கோபம் ஊமையாகிவிடும்!
செயலில் அன்பை கரைத்துவிடு...
செருக்கற்ற வெற்றியை சேர்த்துவிடும்...
எதிரி மீது அன்பை செலுத்து!
எதிர்க்காமலே வென்று விடுவாய்..
இறைவன் படைக்கும் போது! படைத்த
இயல்பான குணங்களில்...
இதுவே தலையானது!
காலத்தின் மாற்றங்களில்...
கரைந்து விடாத!
நிதர்சனமே...நில்லாமல்
சுற்றும் சுதர்சனமே!
தாயின் தாலட்டில்...
தந்தையின் நெஞ்சாங்கூட்டில்...
உறவுகளின் உள்ளத்தில்...
உயிரான நட்புக்களின் உணர்வுகளில்...
காதலிக்கு எழுதிய கவிதை வரிகளில்...
காலம் எழுதிய கண்ணீர் துளிகளில்...என
பரிணமித்துக்கொண்ட வரும் உன்னோடு
பயணிக்கிறேன்!
என்னை விட்டு நீ! விலகி விடாதே-நான்
உன்னை விட்டு விலகும் போது!
விடைகொடு...
அருகிலிருப்போரின்
கண்ணீர் துளிகளாக மாறி...