top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Narendran S P - India

Entry No: 

324

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்புக்கும் உண்டு அடைக்குந்தாழ்!

அன்புற்றிருவர் பிரிகையிலே
அளக்கரென ஆர்த்தெழும்
அளக்க அரும் அன்பதனை
அளவான கண்ணீரில்
அளக்க வல்லார் தமைக் கேள்!

அணைபோட்டு அன்படைப்பர்...
அதையும் மீறிக் கசிதலே
நாம் காணும் புறத்தன்பு!
அணையிலே நீர்கசிந்தால்
மதகு இல்லை என்றாகுமா....
அவர் கண்ணீருமே மதகை ஏமாற்றிக்
கசியும் சிறுபகுதியே ஒக்கும்!

என் அன்பு எத்தகது தெரியுமா...
இதயங் கொள்ளா இருக்கம்
நரம்புகொள்ளா உதிரம்
வரம்புகொள்ளா வெள்ளம்
வார்த்தைகொள்ளா மொழி
வாசல்கொள்ளாக் கோலம்
நினைவுகொள்ளா நிகழ்வு
மனங்கொள்ளா மகிழ்வு!

இதனால்தானோ என்னவோ
என்னன்பு என்றுமே உனக்கு
இடையூறே இழைக்கிறது!

உனக்கு நன்மை பயக்குமெனில்
எனதன்பை அளவில் பொழியுமாறு
நடிக்கச் செய்யவுந் துணிவேன் இனி!
அணையிடுவேன் என் அன்புக்கும்
அணுவளவும் கசியாவண்ணம்
உனக்கு அது நன்மையாகுமெனில்!

bottom of page