top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

MUTHUKUMARAN PALANIAPPAN - India

Entry No: 

3

English Poetry

Lust
The meager thrill of appearing and disappearing in a minute
I don't know who it is
It was an emotional outburst and
Emotion
It has no eye
Outrageous and more
It does not know relationships
You have to look after yourself and be in control
It is very difficult when crossing the border
It has the power to erupt
Do not look at the age difference
Everything can happen in minutes
Petty pleasure eyeless respectable lust.

Poet
P. Muthukumaran
Mob:8428764569
Chennai-95.

Entry No: 

1

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

. காதல்
காதல் கசப்பான மருந்து
காலத்தில் சுவைக்கும்
காலம் கடந்தால் கசக்கும்
காலத்தில் தோன்றி மறையக்கூடியது
அதில் காவியம் படைத்தவர்கள் சிலர்
காணாமல் போனவர்கள் பலர்
அனைத்திற்கும் ஒரு காலம் உண்டு
காலம் கனியும் வரை
காத்திருப்போம்
பெற்றோர்கள் வழி செல்வோம்
அவர்கள் கைகாட்டி
அமைத்து தரும்
வாழ்க்கையை காதலிப்போம்
காலம் முழுக்க இன்புருவோம்

நண்பர்கள்
மோசமான நண்பர்கள் கூட்டமாக இருந்தால்
அதைவிட்டு விலக்காதீர்கள்
நீங்கள் நண்பர்களில் புத்திசாலி என்றால்
உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி
நண்பர்களோடு பகிர்ந்து நீங்களும் முன்னேறி
அவர்களை முன்னேற்றப்பாதியில்
கொண்டுசெல்வது தான் உண்மையான நட்புக்கு சாட்சி.
நான் புத்திசாலி என்று தனித்து சிந்திக்காதீர்கள்
அது நல்லதல்ல பிற்காலத்தில்
அது உங்களையே அழித்துவிடும்

Entry No: 

2

தமிழ் கதை (Tamil Kadhai)

இன்றும் முதிர்கன்னி என்றும் முதிர்கன்னி
இளைய இயற்கை கொஞ்சும் காலைப்பொழுது பறவைகளின் சப்தம் பனித்துளிகள் வரவேற்போடு இனிமையான இன்றைய நாள் இனிதாய் தொடங்குகிறது. பரபரப்புக்கு என்றும் பஞ்சமில்லாத நகரம் அனைவரும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு இயந்திர மனித வாழ்க்கையை மனிதர்கள் வாழ சாலையோர தள்ளுவண்டி உணவகங்களுக்கு பஞ்சமே இல்லாத நாட்டின் தலைநகரம் சென்னை மாநகரம். இந்த சென்னை மாநகருக்கு தங்கள் பள்ளி படிப்பை கிராமங்களில் முடித்துவிட்டு பட்ட படிப்புக்கு தமிழகத்தின் பல திசைகளில் இருந்து மாணவ மாணவிகள் படிப்பதற்கு வருகின்றனர். சென்னை நகரின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ள சிறந்த கலை அறிவியல் கல்லூரி . கல்லூரியில் வெளியூர் மற்றும் உள்ளூர் பிள்ளிகளும் படிப்பர்.
கல்லூரியில் இந்த ஆண்டு சேர்க்கை முடிந்து புதிய வகுப்புகள் தொடங்கின. முதல் நாள் வகுப்புகள் வழக்கம்போல் சீனியர் மாணவ மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அவர்கள் இளங்கலை அறிவியல் பிரிவில் நுண்ணுயிரியல் படிப்பு சேர்ந்தவர்கள். இந்த வகுப்பில் மொத்தம் 50 மாணவ மாணவிகள் கலந்து இருந்தது. அவர்கள் வகுப்பில் உள்ளூர் மாணவர்களும் உண்டு வெளியில் இருந்து வந்து கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படித்தனர். முதல் நாள் வகுப்பு தொடங்கியது மாணவர்களின் சுய அறிமுகம் நடிப்பெற்றது. அதன் பிறகு பல நட்பு வட்டாரங்கள் தனித்தனியாக உருவானது. இந்த கல்லுரியில் படிக்கும் பிள்ளைகளின் குடும்பங்கள் நடுத்தர வர்க்கத்தை சார்ந்ததே.
அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் மிகவும் சிரமத்தில் உள்ள குடும்பங்களும் உண்டு. நண்பர்கள் வட்டம் எம்பொழுது ஒன்றாகவே இருக்கும் இணைபிரியாதது அனைத்தையும் அனுபவித்து பார்க்கும் ஆசை இருந்தது. இந்த நட்பு வட்டத்தில் சில மாணவிகளும் இருந்தனர். இப்படி நட்பு வட்டாரம் உறுதியாக வளம் வந்தது. வகுப்பு புதிது என்பதால் வகுப்பு தலைவன் தேர்தல் நடத்தபட்டது அதில் இருந்து குறிப்பாக செயல்பட்டனர் ஆனாலும் எங்கள் நட்பு வட்டம் வெற்றி பெற்றது. எங்கள் நட்பு வட்டத்தில் இருந்த சிவா என்பவன் தான் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டான்.
நட்பு வட்டம் நாளுக்கு நாள் நிறைய அரட்டை அடிக்க ஆரம்பித்தது மற்றும் மது குடித்தால் சிகரெட் என்று அனைத்தும் அரங்கேறியது. நாட்கள் செல்ல செல்ல வகுப்புகளை புறக்கணித்து எங்கள் நட்பு வட்டம் திரைப்படங்களுக்கு சென்றன. எங்கள் நட்பு வட்டத்தில் மாணவிகளிடம் அதிக வரவேற்பு அதிகம் இருந்தது . நாங்கள் ஒவ்வொருவரும் சில பெண்களோடு அதிக நட்பில் இருந்தோம் அதனால் வகுப்பு தலைவன் சிவா ஒரு பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார்.
நாங்கள் அனைவரும் பெண்களோடு பேசுவோம் விளையாடுவோம் டாவடிப்போம் பிறகு சாதாரணமாக பிரிந்து சென்று விடுவோம். ஆனால் சிவா பழகி வந்த பெண் ரம்யாவின் உறவு மிகவும் நெருக்கத்தில் இருந்தது. அந்த பெண் விடுதியில் தங்கி படிக்கும் வெளியூர் கிராமத்தை சேர்ந்த மீனவ குப்பத்து பெண். அவளது குடும்பம் நான்கு நபர்களை கொண்டது. ரம்யாவின் வீடு கடற்கரை அருகே ஒரு மீனவ குப்பம் ஆகும். எப்பொழுதும் இளங்கலை அறிவியல் வகுப்பில் ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலா செல்வது வழக்கம். இப்படி சுற்றுலா சென்ற பொழுது அனைத்து நண்பர்களும் ஜாலியா சுற்றி திரிவது வழக்கமான ஒன்று ஆனால் சிவாவும் ரம்யாவும் தனித்தே இருந்தார்கள் மிகவும் நெருங்கி பழகி வந்தனர். சிவாவும் ரம்யாவிடம் பல ஆசை வார்த்தைகளை சொல்லி பழகி வந்திருக்கிறான். மேலும் இருவருக்கும் நெருக்கம் அதிகமானது. நாட்கள் செல்ல செல்ல கணவன் மனைவி மாதிரி தொடர்பு வைத்திருந்தனர்.
கல்லூரியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் நாங்கள் முதல் அழகா இருப்போம். இப்படி கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. மூன்றாண்டுகள் நிறைவடைந்து அனைவரும் தேர்ச்சி பெற்று அவர் அவர்கள் ஊருக்கு சென்றோம். ஆனாலும் சிவா மட்டும் ரம்யாவோடு தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருந்தான். மீண்டும் அனைவரும் மேல் படிப்புக்கு அதே கல்லூரியில் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த நட்புகள் அனைவருக்கும் அட்மிஷன் கிடைத்தது மீண்டும் அனைவரும் இணைந்தனர். மீண்டும் வயது முதிர்ச்சியோடு இருபாலர் மேல்நிலை வகுப்பு தொடங்குகிறது.
அதே பாடத்தில் முதுகலை அதே கல்லூரி அதே நட்பு வட்டம் சிறு வயதில் மட்டும் முதிர்ச்சி அதோடு ஒட்டிய பொறுப்பான செயல்பாடுகள். இவர்கள் இப்பொழுது தொடர்ந்திருக்கும் படிப்பு இரண்டு ஆண்டுகள் மட்டுமே. எங்கள் நட்பு வட்டம் அதே வேகத்தில் இருந்தது. எங்கள் நட்பு வட்டத்தில் அனைவரும் மாதத்தில் ஒரு நாள் ஒவ்வொருவர் வீட்டுக்கு செல்வது என்பது வழக்கமாக இருந்தது.
அதன் அடிப்படையில் இந்த மாதம் நாங்கள் ஐவரும் ரம்யா வீட்டுக்கு குப்பத்துக்கு சென்றோம். ஏழ்மையான குடும்பம் ஆனால் அனைவரின் முகத்திலும் ஒரு வகை புன்னகை இருந்தது. அவர்கள் வீடு அருகில் கடற்கரை இருந்ததால் அனைவரும் அங்கு சென்று பொழுதை கழித்தோம் ஆனால் அங்கேயும் ரம்யாவும் சிவாவும் தனிமையில் இருந்தார்கள். இருவரின் நெருக்கம் மிக அன்யோன்யமானது. ரம்யாவும் சிவாவை அவர்கள் குடும்பத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு சிவா அடிக்கடி ரம்யா வீட்டுக்கு சென்று வந்தான். முது கலை படிப்பிலும் கல்வி சுற்றுலா வந்தது. சுற்றுலாவை தொடங்கினோம் ஆனால் இந்த சுற்றுலா முதிர்ச்சியான வயதில் இருந்தது. சுற்றுலாவில் நட்பு வட்டாரத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தோம் ஆனால் சிவா ரம்யா மட்டும் அடிக்கடி தனியாக சென்று விடுவார்கள். நானே சுற்றுலாவில் ஒரு சமயத்தில் எதிர்பாராத விதமாக ரம்யா மடியில் சிவா படுத்து பேசி கொண்டிருந்த நிகழ்வை பார்த்து தெரியாத மாதிரி அங்கிருந்து நகர்ந்து விட்டேன். பின் அவர்களிடம் நெருங்கி பழகுவதால் சில நல்ல கருத்துக்களை மேற்கோள் காட்டி கோரினேன் ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை. அவர்களை இன்ப சுகம் ஈர்த்தது.
அவர்கள் இருவரும் தங்கள் போக்கை சிறிதும் மாற்றிக் கொள்ளவில்லை. நாட்கள் கடந்தன உயர்கல்வி படிப்பும் முடிவுக்கு வந்தது. ரம்யா மிகவும் ஒழுக்கமான பெண் ஆனால் அவளை சிவா சில ஆசை வார்த்தைகளால் மயக்கி தன் வசம் வைத்திருந்தான். இரண்டாண்டு முதுகலை படிப்பு முடிவடைந்து அனைவரும் பிரிந்து ஊர்களுக்கு சென்றோம். . ஆனால் சிவா அடிக்கடி ரம்யா வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். ரம்யா பெற்றோர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறவர்கள் தானே என்று கண்டும் காணாமலும் விட்டுவிட்டனர்.
நாட்கள் நகர்ந்து சென்றன. முதுகலை படிப்பு தேர்வு முடிவு வந்தது. அனைவரும் தேர்ச்சிபெற்றோம் . இதற்கு மேல் சிலர் ஓராண்டு கல்வியியல் படிப்பு படிக்க விரும்பினார் சிலர் பணிக்கு சென்றனர் சிலர் ஆராய்ச்சி படிப்புக்கு சென்றனர். நண்பர்கள் வட்டத்தில் சிலர் கல்வியியல் படிப்பை தொடர அதற்காக விண்ணப்பித்தோம். அதில் சிவா மற்றும் ரம்யாவும் விண்ணப்பித்தார்கள். விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்முக தேர்வுக்கு கடிதம் வந்தது. சில தினங்கள் தேர்வு முடிந்து அனைவருக்கும் கல்வியியல் படிப்பில் சேர கடிதம் வந்தது. கல்வியால் ஓராண்டு படிப்பு சென்னையில்தான். அனைவரும் படிப்பை தொடர சென்னை வந்தோம் எப்பொழுதும் போல படிப்பும் தொடர்ந்து அனைவருக்குமான இயல்பான நட்பு தொடர்ந்தது.
நாங்கள் எப்பொழுதும் போல பழகுவோம் அவ்வளவுதான் ஆனால் சிவா ரம்யாவோடு நெருங்கி பழகி கொண்டுதான் இருந்தான். அவள் மீது அதிக ஆதிக்கம் செலுத்தினார் . ரம்யா சிவாபல ஆண்டுகள் நம்பிக்கையோடு காதலித்து பல நேரங்களில் எல்லை மீறியுள்ளார்கள் நல்லது நடக்கும் என்று. இப்படியாக நாட்கள் நகர்ந்தன ஓராண்டு கல்வியியல் படிப்பும் இறுதித் தேர்வுக்கு வந்து இறுதிக்கட்டத்தை எட்டியது. எனது நட்பு வட்டத்தில் பணவசதி குறைவு என்பதால் படிப்பை முடித்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தோம். சிலர் ஆசிரியர் பணிக்கு சென்றனர் சிலர் வேறு பணிக்கு சென்றனர். குறிப்பாக ரம்யா சொந்த ஊரிலேயே ஆசிரியர் பணிக்கு சேர்ந்தார். அதுவும் சிறந்த பள்ளி அரசு நிறுவனத்துக்கு நிகரானது நல்ல சம்பளம்.
ஆனால் சிவாவுக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்று ஆசை அதன் படி பல வெளிநாட்டு நண்பர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டு வந்தான். பழைய எங்கள் வயதை ஓத்த முஸ்லிம் நண்பர் அப்பா தாய்லாந்து அடிக்கடி வைரம் கொண்டு செல்லும் தொழில் செய்து வந்தார் அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி சிவா எண்ணப்படியே ஒரு வழிய வெளிநாடு தாய்லாந்து போய் சேர்ந்துவிட்டான். ஆனால் வைர வியாபாரம் கடத்தல் சம்மந்தமானது என்பதால் ஏதோ ஒரு விவகாரத்தில் தாய்லாந்தில் மாட்டிக்கொண்டான் இந்தியாவில் இருந்து அனுப்பிய நண்பர் கண்டுகொள்ளவில்லை. சிவா தாய்லாந்தில் பல போராட்டங்களை சந்தித்தான் அதன் பின் தாய்லாந்தில் நண்பர்களை பிடித்து அதன் மூலம் அருகில் உள்ள சிங்கப்பூர் நாட்டுக்கு சென்று விட்டான். சிங்கப்பூரில் தனக்கு படித்த படிப்புக்கு வேலை கிடைத்தது தமிழ் மக்களும் அங்கு பனி இருந்ததால் சிறப்பாக போனது. சிங்கப்பூரில் பச்சை கார்டு வாங்கினான் சிங்கப்பூர் சிடிசனாக மாறினான். வருடங்கள் பல உருண்டோடின. ரம்யாவோ பலமுறை முயன்றும் சிவாவை தொடர்பு கொள்ள முடியவில்லை ஆனாலும் அவளுக்கு சிவா மீது மிகுந்த நம்பிக்கை. ஒருவழியாக ரம்யா நண்பர்கள் மூலம் சிவாவின் சிங்கப்பூர் நம்பரை வாங்கினால். சிவாவை தொடர்பு கொண்டாள் பேசினால் அவள் எப்போதும் போல நார்மலாக இருந்தால் ஆனால் சிவாவின் பேச்சில் உயர்வு மற்றும் இருந்ததை உணர்ந்தாள் ரம்யா ஆனால் மனதளவில் சிறு நம்பிக்கை வைத்திருந்தால். பணம் பெருகி வசதிகள் அதிகம் ஆனவுடன் சிவா தான் என்ற தன்னிலையை மறந்தான். எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அவன் சொல்வதுண்டு நாம் யாராவது பிற்காலத்தில் சிறப்பான பணிக்கு சென்றாள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்று. நான் அவன் சொன்னதை முழுமையாக நம்பினேன். ஆனால் அவன் பேசும் விதத்தை பார்க்கும் பொழுது வித்தியாசமாக இருந்தது. சிவா போனில் தொடர்புகொள்வன் என்ற நம்பிக்கையில் இருந்தேன் ஆனால் அவன் தொடர்பு கொள்ள வில்லை.
ரம்யா பெற்றோர்களும் புரிந்துகொண்டனர் ரம்யாவுக்கு உடன்பிறந்த வயதுக்கு வந்த தங்கை ஒருத்தி இருக்கிறாள். ரம்யாவுக்கு வயது முதிர்ச்சி அதிகரித்தது பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய தொடங்கினர் மாப்பிள்ளை பார்த்தனர் முடிவுக்கு வரும் தருவாயில் ரம்யாவிடம் எடுத்து சொன்னார்கள் ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் இல்லை ரம்யா. ஒரே முடிவில் உறுதியாக இருந்தார். சிவாவின் அண்ணன் சென்னையில் இருக்கிறார் அவருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் கேட்டிருக்கிறார் உங்கள் தம்பி சிங்கப்பூரில் உள்ளவருக்கு எங்கள் பெண்ணை திருமணம் முடித்துக் கொள்ளலாமா என்று. அதற்காக இருவரின் ஜாதகமும் பார்க்கப்படுகிறது பொருத்தம் நன்றாக உள்ளது என்று தகவல் வந்தது. சிங்கப்பூரில் உள்ள சிவாவுக்கும் தெரிவிக்கப்பட்டது சிவா பெண்ணை ஆன்லைன் ஜூம் மூலம் தொடர்புகொண்டு இறுதியாக முடிவுக்கு வந்து விடுகிறார் திருமணம் செய்து கொள்வதென்று. இப்பொழுதுதான் தெரியவந்தது படிக்கும் காலத்தில் அவன் நடந்து கொண்ட விதம் அனைத்தும் போலியானது சந்தர்ப வாதமானது அந்த நேரத்தில் அவன் பிற்காலத்தில் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக போடப்பட்ட வேஷங்கள் தான் அனைத்தும் என்பதை உணர முடிந்தது.
அவர்கள் அண்ணன் பேசியபடி திருமணம் சென்னையில் தடபுடலாக நடந்து முடிந்தது. அவன் திருமணத்தை நண்பர்களுக்கு பலருக்கு சொல்லவில்லை அவன் காதலி ரம்யாவுக்கு கூட சொல்லவில்லை. சிவா சுகமாக தான் குடும்ப வாழ்க்கையை தொடங்கினான் சிங்கப்பூரில். அவன் புது மனைவி சிங்கப்பூரில் வங்கி பணியில் சேர்ந்தார் அதிகரித்தது சந்தோஷமான வாழ்க்கை சுகமாக அனுபவித்து வாழ்ந்தான் துளிகூட கடந்தகால வாழ்க்கையை எண்ணிப்பார்க்காமல். ரம்யாவுக்கோ வயது முதிர்ந்து கொண்டே சென்றது ஆனால் அவள் அவளுடைய குறிக்கோளில் பிடிவாதமாக உள்ளார். அவள் என்ன சொல்ல வருகிறாள் என்றால் நான் என் உடலை ஒருவருக்குத்தான் தனமாக கொடுக்க முடியும் அப்படிப்பட்ட நிகழ்வை நான் அரங்கேற்றி பல ஆண்டுகள் ஆகின்றன அதனால் வேறு ஒரு ஆண் மகனை திருமணம் செய்து அவருக்கு துரோகம் செய்து மன குற்றத்தில் ஒரு குற்ற உணர்ச்சியுடன் வாழ விருப்பமில்லை என்றால். அவளது ஒப்புதலோடு அவளுடைய தங்கைக்கு திருமண முடிக்கப்பட்டது.
வருடங்கள் உருண்டோடின சிவாவுக்கு ஒருவரிடத்தில் ஆண் குழந்தை பிறந்தது சந்தோஷப்பட்டான் ஆனால் சந்தோஷம் நீடிக்கவில்லை ஏன் என்றால் பிறந்த குழந்தை மூளை வளர்ச்சி குன்றியது என்ற தகவலை டாக்டர்கள் சொன்னார்கள். சிவா அதிர்ச்சியில் உறைந்து நிலைகுலைந்து போனான். கடைசி முயற்சியாக ரம்யாவின் பெற்றோர்கள் நண்பர்கள் பலமுறை கேட்டும் சொல்லியும் ரம்யா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. நான் நம்பிக்கையோடு தொடர்ந்த காதல் இன்னும் உயிரோடு இருக்கிறது அதை நான் சாகடிக்க விரும்பவில்லை நான் என் வாழ்கையை இப்படியே முடித்துக்கொள்கிறேன் என்று தன் பேச்சை முடித்தால் அந்த முதிர்கன்னி.
இன்றும் காதலுக்கு உண்மையாக ஒருவனோடு பகிர்ந்து கொண்டு உறவு கொண்டு உடலை வேறு ஒருத்தனுக்கு கொடுத்து துரோகம் பண்ண விரும்பாமல் உண்மை சின்னமாக கற்புக்கரசியாக வளம் வருகிறாள் முதிர்கன்னி. ஆனால் மறுபக்கம் சிவா தன் நண்பர்களுக்கும் காதலிக்கும் செய்த நம்பிக்கை துரோகத்துக்கு ஆண்டவன் பரிசு அவருக்கு அவரது வாரிசை குறையாக கொடுத்துள்ளார் என்பது ஆண்டவன் அவருக்கு கொடுத்த தண்டனை என்பதை அனைவரும் உணர வேண்டும். எனவே வாழும் காலத்தில் அனைவரும் நியாயமாக உண்மையாக பிறரை ஏமாற்றாமல் துரோகம் செய்யாமல் வாழ்வோம். அப்படி எதிர்மறையாக நடந்துகொண்டால் சிவாவுக்கு நடந்தது தான் நடக்கும் நடக்கும். உலகில் உள்ள அனைத்து பெண்களும் ரம்யாவை போல் இருந்தால் உண்மை காதலுக்கு புனிதம் கிடைக்கும் காதல் வாழும்.
கதை எழுதியவர்
பி.முத்துக்குமரன்
MOB :8428764569
சென்னை-95 .

Entry No: 

15

English Story

THE HUMANITY OF MAN
Wherever you return to Chennai, there are people with wheels on their feet. Both males and females fly to work in the morning. Life as a machine has become accustomed to everyone. There were a lot of apartments, especially around Chennai. Most of them were inhabited by affluent and middle class people.

The most important place that attracted everyone was Chennai which is the most populated place. Pearl lived in a house in a small seven-story apartment building in the area that featured a variety of colors. He is a long-time retired civil servant. He had a wife and two sons. He bought the apartment in installments while he was still in office. He is married with two sons.

These were the things he paid his full attention to after he retired. The wife was also very helpful to Pearl. Both raised pets like their children. He grew a natural home garden on the terrace of the house for the deficient. Pearl's focus was more on other lives. The house next to Pearl's house is often rented out. The owner of that house was abroad. Currently a lawyer for that house The family migrated. Both husband and wife are lawyers in that house. They are both very selfish. Those with the most arrogant power. The embarrassment awaited Pearl only after she had moved into the house next door. They started complaining about the pets in their house.

They continued to complain throughout the day. But Pearl endured it all. One day all of a sudden Muthu's dog got dirty at the door of the house next door. The lawyer's family who saw it looked at Pearl and lashed out. Finally the lawyer's family sued Pearl. The case was argued on both sides. Finally the judge set aside the verdict. On the day the court reconvened, Mr. Muthu began to read the judge's verdict There is no escaping the fact that you have affection for your animals but there is a law that cities developed by government order should not let animals come in to disturb others. If you have to grow like that you have to keep it sealed indoors and explain. Otherwise the judge ruled that you should hand over your animals to the sanctuary. Pearl was stunned for a moment and shed tears as it entered her mind. The mind pondered from many angles.

The house where Pearl currently resides is a very zodiac house that was bought many years ago for a pittance. The mind does not give place to leave it and at the same time does not mind giving pets and plants outside like their children. Pearl thought in many ways and finally came to a conclusion. He decided that the house was not important to him and decided to sell his house. The house was then sold to a less populated area near Chennai Selected and bought the house. She moved into the house with her pets and plants. He is living happily with his wife. Pearl is an excellent witness to the fact that there are more human beings in the world.
The Author of the Story
P. Muthukumaran
Mob; 8428764569(Chennai-95.)

bottom of page