top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Muthu Lakshmi - India

Entry No: 

316

தமிழ் கதை (Tamil Kadhai)

சொல்லாத காதல்..

எத்தனையோ நாட்கள் முகநூலில் அவன் தேடியும் அந்த பெயர் கிடைக்கவில்லை. ஒருநாள் எதேச்சையாக, அவன் அந்த பெயரை பார்த்தான் அதே பெயர் சீதா. அவன் படித்த அதே பள்ளிக்கூடம். அதை பார்த்ததும் அவனுக்குள் மனதில் உற்சாகம், மகிழ்ச்சி மனம் முழுவதும் நிறைந்தது. என்னோட சீதா தான் அப்படின்னு சொல்லிட்டு, அவன் உடனே அந்த முகநூல் பக்கத்தில் போய் பார்க்கிறான் ஆனால் அங்க பார்த்தா, அந்த பொண்ணோட போட்டோ இல்ல. ஆனா ஒரு குட்டி பையனோட போட்டோ மட்டும் இருக்கு.

அதைப் பார்த்த உடனே, ஒருவேளை அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதோ அப்படின்னு ஒரு சந்தேகம். எதுவாயிருந்தாலும் ரெக்வஸ்ட் கொடுப்போம் அப்படின்னு அவனும் ப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்துட்டான். ரெண்டு நாளா அவன் பாத்துட்டே இருக்கிறான் சீதா ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அக்சப்ட் பண்ணவே இல்ல. மூணாவது நாள் அக்சப்ட் பண்ணிட்டா. "ஹாய் அருள்" அப்படின்னு முதல் மெசேஜ் பண்ணியிருந்தா. அவனுக்கு ரொம்ப சந்தோஷம் உடனே அவனும் ரிப்ளை செய்தான். ஏழு வருடம் கழித்து, ரெண்டு பேரும் அப்போதான் பேச ஆரம்பிச்சாங்க.

அவள் பேசியதிலேயே, அருள் கண்டுபிடித்து விட்டான். அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று. இத்தனை நாட்கள் பேசாததை எல்லாம் சேர்த்து வைத்து இரண்டு பேரும் பேசினாங்க. ஒரு நாள் அருள் சீதாவிடம் பேசும்போது, "நீ 96படம் பார்த்திருக்கியா?" அப்படின்னு கேட்டான்.

"ம் ம்... நானும் பார்த்திருக்கிறேன்". இப்போ எதுக்கு இந்த கேள்வி என்றாள். இல்ல சீதா நான் சும்மா தான் கேட்டேன். அப்படின்னு சொல்லிட்டு சீதாவுக்கு அருள் ஒரு கடிதம் எழுத ஆரம்பித்தான்.

ஹாய் சீதா, என்னால இத உன்கிட்ட நேரில் பேச முடியல. அதனால உனக்கு கடிதம் எழுதி உன்கிட்ட கொடுத்திருக்கேன். 96 படம் பார்க்கும்போது எனக்கு உன் ஞாபகம் தான் வந்தது. நம்ம ரெண்டு பேரும் மூணாங்கிளாஸ் படிக்கும்போது, நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஞாபகம் இருக்கா?

உன்னை எனக்கு அப்பவே ரொம்ப பிடிக்கும் தெரியுமா! அதே மாதிரியே நீ எட்டாங்கிளாஸ் படிக்கும்போது, என்னோட பெஞ்சுக்கு நேரா உள்ள பெஞ்சில் நீ இருந்தாய். அழகா ரெட்டை ஜடையில் சூப்பரா இருப்ப. ஆனா உன்கிட்ட எனக்கு பேசறதுக்கு தயக்கமாக இருக்கும். பேசினால் எல்லாரும் என்னை கிண்டல் பண்ணுவாங்கன்னு நான் உன்கிட்ட பேசினது இல்ல. உன்னோட பத்தாம் வகுப்பு ரெக்கார்டு நோட், நான்தான் உனக்கு தெரியாமல் எடுத்து வச்சுக்கிட்டேன்.

அப்புறம் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது, ஆண்கள் தனியா பெண்கள் தனியான்னு கிளாசை பிரிச்சிட்டாங்க. அதனால உன்னை அடிக்கடி பார்க்க முடியாது. ஆனால் நீ அந்த புளிய மரத்துக்கு அடியில் உட்கார்ந்து இருப்பாய். உன்னை பார்க்கணும் என்பதற்காகவே நண்பர்களுடன் சண்டை போட்டு நான் ஜன்னல் பக்கத்தில் உள்ள பெஞ்சில் உக்காந்துட்டு உன்னை பாத்துட்டே இருப்பேன். ஆனால் ஒருநாளும் நீ ஜன்னல் பக்கம் திரும்பவே இல்லை. அப்புறம் நானும் காலேஜ் படிச்சேன். காலேஜ் படித்து வேலைக்கு பெங்களூரில் செட்டில் ஆயிட்டேன் அதனால உன்னை என்னால பார்க்கவே முடியல.

என் காதலையும் சொல்ல முடியவில்லை. சொல்லாத காதலுக்கு மதிப்பு அதிகம். இப்போது சொல்கிறேன். ஐ லவ் யூ டி. இதற்கு மேலும் நான் உன்னை மிஸ் பண்ண மாட்டேன் பொண்டாட்டி. என் மனதுக்குள் என்றோ நீ என் மனைவியாக வந்து விட்டாய்!

எப்படியாவது உன்னை பார்த்து இதை எல்லாம் சொல்லி, உன்னை தான் கல்யாணம் பண்ணனும்னு காத்துகிட்டு இருந்தேன். ஒரு வழியா உன்னை பார்த்து விட்டேன். காதலுக்காக காத்துக் கொண்டிருப்பது கூட சுகம் தான். ஆனால் நீ ஒத்து கொள்வாயா, என்னன்னு எனக்கு தெரியல. அதனாலதான் இந்த கடிதம் மூலமா நான் கேட்கிறேன்.
நீ இதைப் பருவக் காதலாகவோ, பப்பி காதலாகவோ நினைக்கலாம். ஆனால் நிஜமா சொல்ல போனால், இப்போ அது பக்குவ காதலா மாறிவிட்டது. இந்த பிப்ரவரி 14 உன்னோட பதிலுக்காக காத்துக்கொண்டு இருப்பேன்.
                               இப்படிக்கு,
                                 அருள் ❤️

bottom of page