REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Musthaq Ahamed - India

Entry No: 

404

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

தன்னை தானே செதுக்கி, உடலை உழைத்தே உருக்கி
தன்னையும் உண்மையும் அறிய வேண்டும்

துணிந்து எதிர்த்து உரை, பணிந்தால் வீடும் ஒரு சிறை
தீங்கு என்றால் எதிர்த்து, மறுக்கும் திறன் வேண்டும்

மனிதனை பகுதிவாரியாக பிரித்தல் கூடாது,
எதிலும் பகுத்தறிவு இருந்தால் கேடாகாது
மறுத்தால் பகுத்தறி மீண்டும்

பசியில் வாடும் மக்களை பார்த்து பச்சாதாபம் வேண்டும்
அறிவிலும் உன் வழியிலும் சிறந்தவனாயினும் அனுதாபம் இருந்தால் கூடும்

நன்று செய்ததுக்கு விடை அவமானம் என்றால், கொதித்தால் ஆகாது
நன்றிலும் விமர்சனங்கள் வில் போல் பாய்ந்தாலும் பொறுத்தல் மேலானது

பிரச்சனை பார்த்து பயந்து ஓடுவது கோழையாகும்
பிரச்சனையை சிந்தித்து செயல்பட்டு ஓட விடுவதே நம் வேலையாகும்

வாழ்வியல் திறன் கால போக்கில் உன்னிடம் வளர வேண்டும்
அதை நன்கு அறிந்து மற்றவர்களுக்கு கொடியாக படர வேண்டும்


"வாழ்வியல் திறனை தெரிந்தவன் அல்ல
வாழ்வியல் திறனை தெரியவைக்க வந்த ஒருவன் "
-முஸ்தாக்