top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Murugan v Murugan - India

Entry No: 

249

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

.....அன்பு...
....முதலும் முடிவும்..
உதிரத்திலிருந்து நான் உருவமானபோது ஊண் ஒவ்வாவிடினும்,களைப்போடு உருவாமாகாத உயிரை ஒருதலைக் காதல் செய்யத் தொடங்கியது என் அன்னையின் அன்பு.
விலா எலும்புகள் நொருங்க பிண்டம் எனை வெளித்தள்ள , அழுகையின் ஆரம்பத்தில் நான், புன்னகையின் உச்சத்தில் என் அன்னை கண்ணீரோடு எனை அள்ளி முத்தமிடுகையில் , நான் சுவாசித்த முதல் காற்று அன்பு.
கம்பன் கூட அறியாத கவிகளை நான் கண்ணுறங்க,என் செவியோரம் முனுமுனுத்தபடி துயில் கொண்டது என் அன்னையின் அன்பு.
சிற்றுண்டி வாங்கித்தா!! என்று சினுங்கிய நேரம்,சில்லரையை அவிழ்த்து சீராக்கி தந்த தந்தையின் அன்பு அசலானது.
மழலை மாறாத வயதில், திருவிழா காண பயணப்படுகையில்
சிம்மாசனமானது தந்தையின் தோல்,நிகரானது கோயில் கோபுரம் என் அப்பாவின் அன்புக்கு.
உலகமறியா சிறுவன் உலகறிய புறப்பட்டபோது தாயின் முந்தானை ஈரமும், தந்தையின் இருதோல் பாரமும் அன்பின் வேறானது.
வருகைப் பதிவேட்டில் அடையாளப்படுத்திய அத்தனை குழந்தைகளையும் ,தம் பிள்ளைபோல் பாவித்த ஆசிரியரின் அன்பு மதிப்பானது.
சீர்பட உள்ளங்கை ஒன்றுசேர,நேர்பட பிழையாக பேசி,புகையில்லா இரயில் வண்டி ஒட்டி, புத்தகத்தில் படம் காண்பித்து,சட்டையில் வீட்டுப்பாடம் எழுதி, மண்ணில் ஒப்பனை செய்து,தடுக்கி விழுந்தால் தட்டியனைக்கும நட்பு வெகுநாட்களில் அன்பானது.
அணிலின் பின்வரிக்கோடுகள், மழைக்காலத்தில் ஆகாசத்தின நீலநிற பாடல்கள்,மெட்டு அமைக்காத கால்களின் தாலங்கள் ,என பல மணங்கள் ஒரிடத்தில் ஒன்றாய் பேசும் தருணங்கள் அன்பின் விருட்சமானது.
எழில் வானம் எட்டிப்பார்க்கும் என நெருடலானது என் மனம் அவள் வாய்மொழ்கையில், அவள் பேசுவது குறைவுதான் எனினும் அன்பை முன்மொழியவிட்டு செல்வாள்.
கவலையுடன் நான் அமர்கையில் ,கைக்குட்டையில் கண்ணீரை கசியவிட்டுச்செல்லும் அவளின் அன்பு ஈரமானது.
ஈருயிர் ஒன்றாய் கலந்தனவே, என் உயிரணு உருவமாகி இருவர் அகம் முகம்
ஒன்றாகியபின்,வழியில்லா ஓடைபோல் வழிந்தோடும் கண்ணீரை, பிள்ளையின் அழுகைகோலத்தை புன்னகையுடன் கண்டு ரசிக்கும் அன்பு சுவையானது.
வாழ்ந்த வாழ்வை திரும்பி பார்த்த வண்ணம் உயிரில் உருவான உருவத்திற்காக, அடுக்கடுக்காக சேமித்து வைத்த புன்னகை, குறும்புத்தனம், ஊடல், இன்பம், துன்பம் என் யாவற்றையும் செல்ல பிள்ளைக்கு செலவழிக்கும்போது வட்டியானது அன்பு.
உனக்கென நான்,எனக்கென நீ என முதுமையில் இளமையை ரசித்தபடி, மார்போடு ஊஞ்சலாடும் நினைவுகளை இருவரும் வாய்மொழியவிட்டு , யுகங்கள் மாறலாம் ,நம் அகம் மாறுமா என கவிதை பேசி செல்லும் அன்பே வாழ்வின் முடிவுரையானது.

...நன்றி...
.. அன்புடன்.. முருகன்.

bottom of page