top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Mrs.Rajathilagam Balaji - Hungary

Entry No: 

297

தமிழ் கதை (Tamil Kadhai)

மன்னிப்பு கேட்டார்


அந்த பெண் தான் செய்த தவறை உணர்ந்து தாத்தாவிடம் மன்னிப்பு கேட்டார்.

பேருந்து ஒன்றில்,ஆதரவற்ற நிலையில் உள்ள ஒரு வயதான தாத்தா அனைவரிடமும் யாசகம் பெற்று கொண்டிருந்தார்.யாசகம் பெற்றதும் வண்டியை விட்டு கீழே இறங்கி சென்றார்.

பேருந்து புறப்படத்தொடங்கிய சமயத்தில், அங்கிருந்த பெண் ஒருவர்,ஐயோ! என் பர்ஸை காணவில்லையே? பஸ்ஸை நிறுத்துங்க சார்!என்று பயங்கரமாக கூச்சலிட்டார்.நல்லா தேடி பாருங்கமா! என்றார் நடத்துநர்.பார்த்துட்டேன் சார்.பர்ஸை காணவில்லை.

கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி வந்த அந்த கிழவன் மேல தான் எனக்கு சந்தேகமாக இருக்கு என்றார்.உடனே பேருந்தை விட்டு இறங்கி,கீழே நின்று கொண்டிருந்த தாத்தாவிடம் சென்றார்.
ஒழுங்கா என் பர்ஸை கொடுத்துவிடு கிழவா! என்று மரியாதையில்லாமல் பேசினார்.வேகமாக ஸ்கூட்டியில் வந்த நபர் ஒருவர், ஏய் சுமதி! பர்ஸை வீட்டிலே மறந்து வச்சிட்டு கிளம்பிட்டடி என்றார்.

சுமதி தான் செய்த தவறை நினைத்து வருந்தி, தாத்தாவிடம் மன்னிப்பு கேட்டார்.

Entry No: 

298

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

1.ஆற்றல்

போராட்டம் நிறைந்த உலகில்
பயத்தை விடுத்து
நம்பிக்கையை விதைத்து
எதையும் எதிர்த்து போராடும்
ஆற்றலுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்!!!

2.போராளி

தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நோயாளிகளை காப்பாற்ற
பாடுபட்டுக்கொண்டிருக்கும்
ஒவ்வொரு மருத்துவ ஊழியர்களும்
வைரஸ் தாக்காமலிருக்க
போராடிக்கொண்டிருக்கும்
ஒவ்வொரு சமானிய மனிதர்களும்
போராளிகள் தான்!!!

3.கடல்
உண்ண உணவும்
குளிக்க இடமும் தருகிறேன்
மழலையரை மகிழச்செய்கிறேன்
மனதிற்கு இன்பம் தருகிறேன்
அப்படி இருக்க என்னை
அசுத்தம் செய்வதேன்?
என்னுள்ளும் உயிர்கள்🐬🦀🐟வாழ்கின்றன

இப்படிக்கு
கடல்🌊

4.வருமானம்

வரும் வருமானத்தை தேவையறிந்து
அளவோடு செலவு செய்து
இக்கணம் சிக்கனம் செய்தால்
எக்கணமும் எவரிடமும்
கையேந்தி நிற்க தேவையில்லை!!!

5.ஏமாற்றம்

வாழ்க்கையில் சில நேரங்களில்
ஏற்படும் மாற்றங்கள்
ஏற்றத்தையும் தரும்
ஏமாற்றத்தையும் தரும்
ஏற்றத்தின் போது
அடக்கம் கொள்!!!
ஏமாற்றத்தின் போது
பொறுமை கொள்!!!

6.பேராசை

ஐம்புலன்களையும் அடக்கி வாழ தெரிந்தால்
ஆசையென்னும்
ஆழி அலையிலும்
பேராசையென்னும்
பெருங்கடலின் ஆழத்திலும் சிக்காமல்
அதன் மேல் அழகாக படகு சவாரி செய்யலாம்!!!!

7.மரியாதை

மரியாதை....
பணத்தை பொறுத்து கிடைப்பதல்ல
பண்பை பொறுத்து கிடைப்பது
அறிவை பொறுத்து கிடைப்பதல்ல
அன்பை பொறுத்து கிடைப்பது
ஆடம்பரம் பொறுத்து கிடைப்பதல்ல
அடக்கத்தை பொறுத்து கிடைப்பது

8.சாதனை


சாதனை செய்ய முயற்சிக்கும் போது
ஏற்றம் வரும்
இறக்கம் வரும்
ஏமாற்றம் வரும்
தடுமாற்றம் வரும்
சோதனை வரும்
வேதனை வரும்
எல்லாம் கடந்தால் வெற்றி வரும்!

bottom of page