top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Mrs.P.Hemamalini Ramesh selvakkumar - India

Entry No: 

373

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

*மானுடம் வீழ்வதற்கல்ல*

எண்ணிலடங்கா உயிர்களைபழரசமாக உறிஞ்சிக்குடிக்கிறாய்
கனவுகளை சுமந்து வந்தஇளைஞனையும்
பெற்றோரைபுதையலாய் சுமக்கும்புதல்விகளையும்
அருந்ததி பார்த்து ஆனந்த வாழ்வை ஆரம்பித்த இளம்
சோடிகளையும்
தன்னுயிர் தந்து இன்னுயிர்ஈன்றெடுக்கும்இனியதாய்களையும்
புது உலகிற்கு வெளி
வந்துசாதிக்கப்போகும் வளர் இள மொட்டுக்களையும்
வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு வறுமைக்கு தாமே ஆதாரமாய்இருப்பவர்களையும்
பிறர்நலத்தை தன்னலமாக்கி சொந்த வாழ்வை பொது நலமாக்கி அர்ப்பணித்த மருத்துவர்களையும் அனுதினமும் அனைணத்தணுவும்நோகுமளவுஉழைத்துகளைத்துநடைபாதையில்உறங்கும்அன்றாடங்காய்ச்சிகளையும்
தாய்நாடு தனை மறந்து வாழ தடம் தேடி புலம் பெயர்ந்த கூலித்தொழிலாளர்களையும்
பிடித்து படித்து அறிவைஅகண்டமாக்கி
ஆழ்கடலை துளைத்து
விண்ணையே
விரல்இடுக்கில்சொடுக்க நினைக்கும் மாணவர்களையும்
நாட்டை நடமாட வைக்கும் முதுகெலும்பில் உன்னத பயிர் வளர்த்து உலகிற்கே உணவளிக்கும் உழவர்களையும்
தன் நாட்டை தாயாக நினைத்து தீண்ட நினைப்பவனை
நினைக்குமுன் வீழ்த்தும் ராணுவ வீரர்களையும்
இன்னும், இன்னும், பல இன்றுயிர் களையும்
தினம் தினமும்
கொன்று குவித்து
மண்ணுலகை விட்டு
விண்ணுலகில் வாசம் செய்யப்போகும் ஆத்மாக்களை
புதைப்பதற்கும் எரிப்பதற்கும் வழி இல்லாமல் ஆயிரம் தடைசெய்கிறாய்.
சும்மா வாங்காத சுதந்திர காற்றை சுவாசிக்க விடாமல் செய்கிறாய்
போதும் நின் ஆட்டம்.
இறைவன் முன் நீ எப்போதும் தூசிதான்.
உணர்ந்துகொள்ஒன்றை

மானுடம் எப்போதும் வீழ்வதற்கல்ல.

bottom of page