REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Miss.Sripriya Rajagopalan - India
Entry No:
18
தமிழ் கதை (Tamil Kadhai)
விழியிலே மலர்ந்தது
-ஆர்.ஸ்ரீப்ரியா
சுரேஷுக்கும் விநோதினிக்கும் பிறந்த மகன் விஷ்வா. திருமணம் ஆன இரண்டு ஆண்டிலேயே சுரேஷ் விபத்தில் இறந்துவிட விஷ்வாவை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள் வினோதினி.
வினோதினி ஒரு சிறு அலுவலகத்திற்கு உரிமையாளர். தன்னுடைய நிறுவனத்திற்கு கிடைத்த ப்ரொஜெக்ட்க்கு பொறியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு செய்வதற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். நேர்முகத்தேர்வில்ஆறாவது பெயரை பார்த்ததும் அவளுடைய மனதில் ஒரு மின்னல் வெட்டியது. ஆறாவது நபர் உள்ளே வர வினோதினி திகைப்புடன் தன் இருக்கையிலிருந்து எழுந்தாள்.
விவேக்கும் வினோதினியும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். தன் ப்ரொஜெக்ட்டில் விவேக் வேலை செய்ய தேர்வு செய்தாள் வினோதினி.
"என் மனைவி பெயர் சுமதி. அவள் ஒரு இன்டிரியர் டிசைனர். எனக்கு ஒரு அழகான பெண்குழந்தை சம்யுக்தா. உன்னை பத்தி சொல்" என்றான்.
"என் திருமணம், என் தந்தை மரண படுக்கையில் இருந்தபோது அவசரமாக நடந்தது. எனக்கு திருமணம் ஆன இரண்டு வருடத்திலேயே என் கணவர் சுரேஷ் ஆக்சிடெண்டில் இறந்து விட்டார். எனக்கு ஒரு ஆண்குழந்தை விஷ்வா " என்றாள் வினோதினி. விவேக் மிகுந்த சோகமுற்றான்.
அதற்கு வினோதினி "வாழ்க்கை என்பது ஒரு புதிர். நாம் திட்டமிட்டபடியே எல்லாம் நடந்து விடாது. கெடுதல் வரும்போது மனம் துவண்டு விடாமல், மனதை நல்ல விஷயங்களில் திசை திருப்பினால் தான் நாம் அர்த்தமுள்ளதாக பயணிக்க முடியும். என் கணவர் இறந்தவுடன் இரண்டு பேரில் ஆரம்பித்த இந்த கம்பெனி இன்று முப்பது பேர் கொண்ட கம்பெனியாக மாறி இருக்கிறது" என்றாள்.
"உன்னை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. கண்டிப்பாக இந்த வார இறுதியில் என் வீட்டிற்கு சாப்பிட வர வேண்டும்" என்றான் விவேக்.
வீட்டிற்கு வந்த விவேக் முகத்தில் வாட்டம் இருப்பதை கண்டுபிடித்த அவனுடைய மனைவி சுமதி காப்பியுடன் வந்தாள்.
"சுமதி, இன்னைக்கு வினோதினியை பார்த்தேன்" என்றான். விவேக் சுமதியிடம் நடந்ததை வேதனையுடன் கூறினான். அதை கேட்ட சுமதி விவேக்கிடம் "வினோதினி தன் வாழ்க்கையை எவ்வளவு அர்த்தமுள்ளதாகவும் மாற்றி இருக்கிறார்கள். அவர்களை நம் வீட்டிற்கு சாப்பிட கூப்பிடுங்கள்" என்றாள்.
விவேகின் மனஓட்டங்கள் ஒரு பத்து வருடத்திற்கு முன்பு கல்லூரி நாட்களுக்கு சென்றது. வினோதினியை பார்த்த நொடிப்பொழுதிலேயே அவள் விழியின் அழகில் விழுந்து விட்டான் விவேக். இருவரும் மனப்பூர்வமாக காதலித்தனர். இருவரும் ஒரு வேலையில் சேர்ந்தவுடன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தனர். ஆனால் விதி அவர்களுக்கு வேறு பாதையை திட்டமிட்டு வைத்து இருந்தது.
வினோதினியின் அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லை என்று தேர்வின் கடைசி நாள் தந்தி வர, தேர்வு முடிந்ததும் அவசர அவசரமாக ஊருக்கு அப்பாவை காண சென்றாள். தன் நண்பரின் மகனான சுரேஷை தன் மரணப்படுக்கையிலேயே வினோதினிக்கு திருமணம் செய்து வைத்தார். சூழ்நிலையால் எதுவும் செய்ய முடியாமல் விதி தந்த பாதையில் பயணித்தாள் வினோதினி.
வினோதினியை காணாமல் சுரேஷ் பலவருடம் தேடி,பெண்பார்க்கும்போது சுமத்தியிடம் எல்லா உண்மைகளையும் கூறி விட்டு சுமதியின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டான்.
அந்த வாரம் வினோதினியும் அவள் மகன் விஷ்வாவும் விவேக்கின் வீட்டிற்கு சாப்பிட வந்தனர்.
வினோதினி சுமதியிடம் "உன் வீட்டின் உள் அலங்கரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. என்னுடைய அலுவலகத்திற்கும் நீ தான் உள் அலங்கரிப்பு செய்து கொடுக்க வேண்டும்" என்றாள்.
சுமதியும் "கண்டிப்பாக செய்து கொடுக்கிறேன் " என்று சந்தோஷமாக சொன்னாள்.
காதல் பல பரிமாணங்களில் வெளிப்படும். வினோதினியின் விழியில் மலர்ந்த விவேக்கின் உண்மையான காதல் தன் பரிமாணத்தை அழகான நட்பாக மாறி பயணித்தது.
Entry No:
19
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
ஓர் இதயத்தின் கண்ணீர்
-ஆர்.ஸ்ரீப்ரியா
மனிதா!!!
விண்ணை தாண்ட முயற்சி செய்தாய்
அதில் என் இதயத்தையும்
ஓட்டை செய்து விட்டாயே
ஆடம்பர வாகனத்தில் நீ பவனி வர
என் உடலை கரும் புள்ளியால்
கோலம் போட்டு விட்டாயே
இது நியாயமா!!!
கண்ணுக்கு பசுமையாய் மரம்
என் இதயத்தை குளிர்விக்கும் மரம்
உன் மனதில் மட்டும் ஏன்
வெட்டச் சொல்கிறது?
அழிவிலிருந்து பிறப்பதும் ஆக்கம்
ஆனால் ஒன்றை அழித்து பிறப்பது
ஆக்கமல்லவே
உனக்கு ஆறறிவு, ஆம்
அப்படி தான் சொல்கிறது விஞ்ஞானம்
அதில் ஒன்றுகூட
என் நிலமையை உனக்கு
எடுத்து சொல்லவில்லையோ!!
மனிதா!!
எதை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறாய்
உன் அறிவியல் வளர்ச்சி எல்லாம்
உலகம் என்னும் ஆதாரம் இருக்கும் வரைதான்
ஆனால் அந்த பூமியை சூடாக்கி
எதை சாதிக்க பயணித்து கொண்டிருக்கிறாய்
உன் வேகத்திற்கு தடை போடு
சிறிது சிந்தித்து பின் விழித்தெழு
நான் தான் பிராணவாயு படிமம்
உன் சுவாசம் நீள்வதும் வீழ்வதும்
மரங்களின் மீதான உன் காதலை பொறுத்தது
என்னை பாதுகாத்து
உன்னை காத்துக் கொள்
மனிதா!!!