top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Mathavan Balasubramaniyan - India

Entry No: 

286

தமிழ் கதை (Tamil Kadhai)

ஒரு மரக்கிளையில் இரண்டு கிளிகள் காதலர்களாக அமர்ந்திருந்தன. அதில் ஆண்கிளி தன் சுற்றத்தை பாதுகாப்பதுடன் சேர்த்து பெண்கிளியை பாதுகாக்கும் கடமை உணர்வு கொண்ட கிளியாய் இருந்தது. பெண்கிளியோ ஆண்கிளியை காதலிப்பதே தன் கடமையாய் கொண்டிருந்தது‌. காலம் செல்ல செல்ல இரு கிளிகளும் ஒரே மரக்கிளையில் தங்கி வாழ்ந்து வந்தனர். கடமை தவறாத கிளியும் காதலே கடமை என வாழ்ந்த கிளியும் என்றும் கட்டுபாடுகளை மீறியது இல்லை. இந்த கிளிகளை கண்ட மற்ற பறவைகளோ சற்று பொறாமை கொண்டாலும் இவைகளின் பாசத்தை கண்டு வாழ்த்தியே சென்றன. ஒரு நாள் அங்கு வந்த கழுகு பெண் கிளியை தாக்க வர குறுக்கிட்டு கழுகின் அலகில் காயம்பட்டு கீழே விழுந்தது ஆண் கிளி. இதைக்கண்ட பெண்கிளியும் கீழே விழுந்து ஆண்கிளியை ஏந்தியவாறு தரையில் விழுந்தது. இரண்டும் வலியில் துடித்தாலும் ஒன்றையொன்று கட்டித்தழுவி கொண்டன. இதைக்கண்ட கழகு மனம் வருந்தி இருவரையும் வாழ்த்தி சென்றது‌. இப்படி வாழ்ந்த கிளிகள் ஒரு நாள் அவர் அவர் வீட்டிற்கு சென்று வர புறப்பட்டன. திரும்பி வந்தபொழுது ஆண்கிளி மரக்கிளையை ஏமாற்றத்துடன் பார்த்தது ஏனெனில் அங்கு பெண்கிளி இல்லை. பெண்கிளியின் வீட்டிற்கு சென்ற ஆண்கிளி அதை காண முடியாமலே திரும்ப வந்தது‌. இப்படியே பல ஆண்டுகள் ஆயின ஆனால் இன்றும் அந்த ஆண்கிளி பெண்கிளியை தேடி சென்று கொண்டுதான் இருக்கின்றது. பெணகிளியின் நிலை என்ன தெரியுமா தன் இரண்டு இறக்கைகளையும் இழந்து கால்களையும் இழந்து ஓர் உயிர் பிணமாய் கிடக்கின்றது பெண்கிளி தன் வீட்டில். காரணம் பெண் கிளியின் பெற்றோருக்கு காதல் பிடிக்காதாம். காத்திருக்கும் ஆண்கிளியும் கால் மற்றும் சிறகு இழந்த பெண்கிளியும் இணைய வேண்டுவோம். நன்றி. வணக்கம்.

Entry No: 

285

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

புரியாத புதிரெனவே இருந்ததடி பெண்ணே,
உன்மீது நான் கொண்ட அன்பு...
கட்டுக்கடங்காத காதலுடன் உனை கண்டாலும்,
அதை காதல் என குறிக்க முடியவில்லை...
உனை கட்டியணைக்க கைகள் நினைத்தாலும்,
மனம் என்றும் உனை மதிப்பிற்குரியவளாகவே பார்த்தது...
என் தோளில் உன் தலை சாய்த்து
உறங்க வைக்க உணர்வுகள் தோன்றினாலும்,
உன்னை தூரமாக இருந்து ரசிக்க மட்டுமே முடிந்தது...
அன்பே
உன் சுக துக்கங்கள்
எனை அறியாமலே
என்னுள் எதிரொலிக்கும்...
ஏனடி எனக்குள் இந்த
இன்ப சித்திரவதை..
வாழ்க்கை தந்த வலிகளை தாண்டி நான் நடந்தாலும்,
என்னவளே
உன் முகம் துவண்டாள்
என் இதயம் வலிக்கின்ற வலியை ஏனோ தாங்க முடிவதில்லை...
நீ என்னவளாய் இன்று
இல்லாமல் போனாலும்,
என் இதயத்துடிப்பில்
இருக்கின்றாய்
என்றுமே என்னவளாக....

bottom of page