top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

MASSILAMANY SRAVANTI - India

Entry No: 

487

English Poetry

A SONNET FOR MY LOVELY (BEST) FRIEND

You are not the flowers,
The ones just for seasons;
You are the roots,
The one through all reasons.
The tree of dear life has many branches,
Our pals and their joys which join with us.
It's upto us to have many new launches - which
May benefit us or make us fuss!
I never knew I would meet you,
For I had to start my life anew.
I was bestowed upon by not a few;
And, that's when I met you,
A fairy to light up my life's view,
It's none other than you, my brew!
- MASSILAMANY SRAVANTI

Entry No: 

481

தமிழ் கவிதை (Tamil Kavidhai)


அன்பின் மறுபிறவி அம்மா

ஒவ்வொரு அசைவிலும் அன்பைக் கண்டேன்
ஒன்பது திங்களில் உலகைக் கண்டேன்
துணிக்கடை முழுவதும் வீட்டில் கண்டேன்
தொல்லையிலும் வாடாஉன் முகத்தைக் கண்டேன்

தினந்தோறும் அயராமல் சுவையுடன் சமைப்பாய்
திறமிக்க மகளை உருவாக்க நினைப்பாய்
அதற்கான முயற்சிகள் எல்லாம்நீ அமைப்பாய்
ஆனந்தத்துடன் நான்எது செய்தாலும் நீரசிப்பாய்

பள்ளிக்கூட வாசல்வரை கைகோர்த்து சென்றேன்
போட்டிகளுக் கெல்லாம் வீரத்துடன் சென்றேன்
என்னால் இயன்றவரை பரிசுகளும் வென்றேன்
என்மாசில்லா சிரிப்பால் உன் மனதையும் வென்றேன்

என் பிள்ளை வாழ்வில் உறுதியாய் உயர்வாள்
என்றுமே சாதனை பட்டியலில் திகழ்வாள்
எல்லையில்லா வானளவு வெற்றிகளை அடைவாள்
என்றஉன் எண்ணங்களை மெய்யாக்கி மகிழ்வாள்

அன்பினால் பேசும்உன் முகத்தைக் கேட்டேன்
அயராது உழைக்கும்உன் மனத்தைக் கேட்டேன்
"கடல் போன்ற உறவுகளில் அலைகள் நானோ?"
"காலத்தால் அழியாத கடலே நீதான்" என்றாய்

நன்றி என்னும் சொல் போதாது
நிந்தன் அறிவுரை சிரம்விட்டுப் போகாது
உன்னுலகில் நானிருப்பேன் ஒர் இளவரசியாய்
உன் இணையில்லா மறுபிறவி நான் மட்டும்தான்!
- BY M.SRAVANTI

bottom of page