REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Mariyammal Murugan - India
Entry No:
320
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பு
அன்பை அடக்கமாய்.. அனுசரிப்பாய்..ஆதரவாய்..
ஆறுதலாய்..கருணையாய்.. கண்ணீராய்.. கதறலாய்.. காத்திருப்பாய்.. காதலாய்.. இவ்வாறு வெவ்வேறு வண்ணங்களில் வெளிப்படுத்தினாலும்.. அதை சூழ்நிலையின் உச்ச்சத்தில் உள்ள சில உறவுகள்... சுயநலத்தின் உச்ச்சத்தில் உள்ள சில உறவுகள்... என் நிலையிலும் தன்னை மாற்றிக் கொள்ள எண்ணாத சில உறவுகள்...என் நிலையிலும் பிறர் மாற்றத்தை விரும்பாத சில உறவுகள்... புரிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை!.. அன்பை புரிந்து கொள்ளாத மனங்கள் எழுதப்படாத காகிதமாய்... நிறப்பபடாத கோடுகளாய்... மணம் வீசாத மலராய்... வெறுமையோடு கோபம் வெறுப்பு என்னும் கதவுகளால் மனதை பூட்டி கொண்டு அலைகின்றன... அவற்றை திறக்க அன்பு என்னும் சாவியை பயன்படுத்துவோம்... அன்பை காட்டி உள்ளத்தை திறந்து வைக்க என்னிடம் அன்பு நிறைந்த மனம் உள்ளது... அன்பை புரிந்து கொள்ள உங்களிடம் மனம் உள்ளதா?...அவ்வாறு ஒன்று உண்டு எனில் அதில் சிறிதளவு ஈரம் இருந்தால் நிச்சயம் ஒரு நாள் உங்கள் மனக்கதவு திறந்து அன்பு என்னும் பூ தலையசைக்கும் என்ற நம்பிக்கையில் என்றும் அன்புடன்!...அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் அன்பு எனும் கவிதையை!...
சொற்களில் சந்திப்போம்!...
எண்ணங்களில் சிந்திப்போம்!...
அன்புடன்
மாரியம்மாள்முருகன்