top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

MAHENDRAN R V - India

Entry No: 

139

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

மனைவி அமைவதெல்லாம் ..

பொருத்தம் பத்து பார்த்து..
சந்தோஷ சம்மதம் கேட்டு ..

சம்மதத்தின் பேரில்
சம்மந்திகள்
அக்னியை சாட்சியாக வைத்தார்கள் ..

இருபது வருட இளஞ்கொடி
கைத்தலம் பற்றினாள்..
கன்னி .. காந்தையானாள்.

நெல் பறையை சிதற விட்டு ..
கிரகப்பிரவேசம் செய்தாள் கிருகம்.

விளக்கேற்றி மனையுறுமகள் என
மனையோர் மகிழ
மனைவியானாள்.

விழுதுகளாய் சுற்றங்கள்
வேர் என வதுகை
நம் குலசாமி ,
கும்பிடம் மா .. என்று
மாமி கூற..
கும்பிட்ட குலசாமியை மறந்து ..
வாழ வந்த வீட்டின்
குலசாமியை நெஞ்சில் நிறுத்துகிறாள்
கோமகள்.

புது உறவுகளை உச்சரித்து
உறு வேற்றுகிறாள்
வல்லபி.

தாய் வீட்டு சீதனத்துடன்
தாரமாக வந்த தம்பிராட்டி ..
பிறந்த வீட்டு சொந்தங்களுக்கு
இடைவெளி கொடுக்கிறாள்
பெருமைக்குரிய
பெருமாட்டி.

கணவன் அவன் தன் குடும்பம்..
உயிராய் நேசித்து
கண்ணெனக் காக்கிறாள் கண்ணாட்டி .

கட்டில் சத்தமும்
கொலுசு சத்தமும் மெட்டிச் சத்தமும் .. கலந்த
ராகமாலிகையில்
மன்னவனையே மகனாக மடியிலிருத்தி
அன்பு ஆர்ப்பரிக்கும்
அழகு மாளிகைக்கு .தன்
கருவறையிலிருந்து
காவியம் படைக்கிறாள்
பாரியாள்.

தொப்புள் கொடி உறவுக்கு
உதிரத்தை பாலாக்கி, உயிர் கொடுக்கிறாள்
கற்பாள்.

உறவுகளைச் சுட்டிக்காட்டி ..
உன்னதக் கல்வியைப் புகட்டி ..
தான் கந்தல் அணிந்திருந்தாலும்
தன் பிள்ளை,
கல்லூரி படிப்பு பயில
பம்பரமாய் சுழன்றிடுவாள் ஆயந்தி.

வாலிபம் கண்ட தன்
கருவறை கண்ணின் மணிகளை
மணவறை காணும்
மகிழ்வையும்
மன மகிழ்வோடு செய்திடுவாள்
மனைத் தக்காள்.

அவசர உலகில் ..
அசதியும், சோர்வும்
ஆர்ப்பாட்டம் செய்ய
இறுக்கமான உடல் கூட
சுருக்கங்கள் நிறைந்த
உடலாகிறது..
மனைக் கிழத்திக்கு.

ஓவியனும் வரைந்திடாத
உருவமாய் ..
நரையுடன் கூடிய மஞ்சள் தேய்த்த
மங்கள முகம்
கோமகளின்
கோலாகல அழகு.

கரம் பிடித்த கணவனுடன்
சிரம் சற்றே அசைந்தாட
காலத்தைப் போக்கும்
காந்தை.

கல்யாணத்தின் போது
கைத்தலம் பற்றிக்
கணவனுடன் பின்னால் வந்தவள்..
கணவனுக்கு பின்உறங்கி
முன் எழுந்தவள்..
கடைவீதியானாலும்
கடற்கரை யானாலும்
கணவனின் காலடியை
பின் தொடர்ந்தவன்..
"உங்களுக்கு முன் நான்
பூவோடும், பொட்டோடும், போகனும் .." என்னும்
மணவாளி.

இது போன்ற மனைவிகள் அமைவதால் தான் ..
மழையும் பொய்க்கவில்லை..
கங்கையும்
காயவில்லை ..

கவிதை ஆக்கம்
R.V .மகேந்திரன்,

bottom of page