top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Maharaja Panneerselvam - India
Entry No:
277
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
முன்னம்
ஓர்
சொப்பணம்,
கடல் மணலில்
என் விரல் தொடுத்து
நீ நடக்கிறாய்,
உள்ளங்காலில் கல் குத்த
என் கைகளில் படர்கிறாய்,
பயணம் தூரம் தான்
ஏனோ!
உன் இமையழகில்
மைல்கல்களும் கரைகின்றன,
என் கரங்களுக்கு கணம்
தெரியவில்லை,
உன் கன்னக்குழியின் வெள்ளப் பெருக்கினால்,
உன் பார்வையின் வேகம் புலப்பட
என் கால்களின் பாதையில் தடுமாற்றம்,
கண்சிமிட்டுகிறாய்
தரை தட்டியதே
என் உணர்ச்சிக்
குவியல்....
bottom of page