REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
M VASANTH KUMAR - India
Entry No:
445
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
தலைப்பு
ஒருதலைக்காதல்
உணர்வுகள் மட்டும் கூறிச் சென்று கொண்டிருக்கும் ஒரு உன்னத நினைவுகள்! !
உரையாடல் தேவையில்லை
ஒரு சொல் போதும்
யுகங்கள் பல கடக்க! !
அருங்காட்சியகங்கள் குடியேறும்
என் அறையில்
அவள் தூக்கி எறிந்த ஒவ்வொரு பொருளும் அதில் இடம்பெறும்!!
தூரம் பார்த்ததுமே
துள்ளல் இன்பங்கள் தான்
நெஞ்சங்கள் பொங்கி எழும்
நிமிடங்கள் பதில் சொல்லும்! !
கனவுகளிலேயே காலங்கள் கடந்திடும் அதன் அர்த்தங்கள் எல்லாம் அர்த்தஜாமத்திலேயே விடியல் தரும்!!
அவள் வீதிகளைக் கடந்து விட
வெகு நேரம் ஆகும்
புது விருந்தினர் வந்தது போல் முகம் மலர்ச்சி மாறும்
பாதங்களை பற்றிக்கொண்ட பூமியிலேயே பரஸ்பரம் கொள்ளும்! !
விழிகளின் மூடினால்
அவள் விரல் சாயத்திலேயே
மனம் ஓடல்!!
நான் யார் என்று அறியாமலேயே என்னுடன் கதைத்த அந்த
ஒரு வார்த்தை வரலாற்றுப் பக்கங்களில் ஒரு தொகுப்பாய் ஆனது !!
வெற்றுப் பக்கங்களில் கிறுக்கிய
அவள் பெயர் வேதங்களாக மாறியது!!
தூறல் மழையில் அவள் நனைய
நான் தூக்கம் தொலைத்து அடுத்த மழையை எதிர்நோக்கி வானத்தின் விளிம்புகளை வாடகைக்கு கேட்க தயார் ஆகினேன்! !
திருவிழாக்களில் எல்லாம் வியந்து பார்த்த தேர்களைவிட இவள்
அணிந்து வரும் கொலுசுகளின் அணிவகுப்பை பார்க்கத்தான் நான் ஆயத்தமாவேன் !!
எதிரெதிரே நின்றிருந்தோம்
ஏறெடுத்து பார்க்க மாட்டோம்
ஏழுமயில் தூரத்தில் நின்று
இருந்தாலும் அதை கவனிக்க மறந்திருக்க மாட்டோம்!!
விடியல் கோலங்களுக்கு
புள்ளிகளாகவும்
நண்பகல் கோடைக்கு
நல் இளநீராகவும்
அந்தி மாலையில் சூடும்
மல்லிகையாகவும்
இரவுகளில் இதயம் வருடும் தென்றலாகவும்
மாறத் துடிக்கும் மனதின்
மாற்றமற்ற நிலை!!
நினைவுகளை மட்டும் நினைத்துக் கொண்டு நிமிடங்களை கடத்திக் கொண்டு துடிக்கும் இதயத்தின் தூரல் மழையாக பொழிய கடைசிவரையில் கணிக்க முடியாத எண்ணங்களோடு கடக்கின்றது இந்த ஒருதலைக்காதல்!!
என்றும் மறக்க நினைக்காதே மகுடம் தறிக்கும் நினைவுகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பதே இந்த காதல்!!
யாவர் மனதிலும்
அழியாத இடங்களில் அவை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
இனியும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்!!
தமிழ்விரும்பி
மா .வசந்த்குமார்