REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Lokeshwaran Anandan - India

Entry No: 

529

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காரிகையவளின் கார் கூந்தல்
மணமோ என் மனம் மயக்க
சினத்தில் சிவந்த கன்னமோ
சில்லறையாய் நொறுக்க
நான் உன்னை நோக்க
நீ என்னை நோக்க
ஓவியமாய் நீ இருக்க
வண்ணமாய் நான் இருக்க
வர்ணனை என்ற சொல்லை
அழகாய் வர்ணிக்க
உன் முழுமதி முகம் தேட
கண்ஜாடையில் படைத்த
காவியத்தை கானகத்தில்
புதைத்த பொக்கிஷமாய்
மனதில் பாதுகாத்து
பம்பரமாய் சுழலும் மனதுக்கு
மாங்கல்யம் என்ற பூட்டிட்டு
என்னை நீ களவாட
உன்னை நான் களவாட
கள்வர்களாய் திரிவோம்
உனக்காக நானும் எனக்காக நீயும்...