REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Lokesh Vinayagam - India

Entry No: 

462

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பு.

தாயிடத்தில் பகிரங்கமாகவும்,
தந்தையிடத்தில் மர்ம ரகசியமாகவும்,
காதலரிடத்தில் கண்மூடித் தனமாகவும்,
தங்கையிடத்தில் தயக்க தடைகளுக்கு அப்பாலும்,
தம்பியிடத்தில் தாரைதாரையாகவும்,
அண்ணனிடத்தில் வழிநடத்துதலிலும்,
அக்காளிடத்தில் அக்கறையோடும்,
குருவிடத்தில் தரம் ஏற்றும் கல்வியோடும்,
நண்பனிடத்தில் நேரம் பார்த்து நேர்த்தியாகவும்,
அரசனிடத்தில் அடித்து நொறுக்கும் அலை போன்றும்,
ஆண்டவரிடத்தில் அந்நியோன்யமாக காரணமில்லாமலும்,
பொங்கி எழுவது அன்பு!