top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Logesh S - India

Entry No: 

212

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

கொன்றையில் மலர் சூடி-என்னைக்
கொள்ளை கொண்டவளே...

பாழி நகரின் விழி கொண்டு
பறம்பெங்கும் பாடித் திரிந்து,
முருகன் கண்ட வள்ளியாய்
முட்களுக்கும் முல்லையாய்...

ஏழிலைப்பாலையை ஏங்கச் செய்யும்
வனமகளாய்,
வணைந்த வண்ணக்கொடியே....

சாணைக்கல்லின்றி கூர் தீட்டிய விழியாலே
விரிந்த மார்பை வீழ்த்தி-என்
மனதை பறித்த கள்ளியே...

சோமபானம் துறந்தேன்-உன் விழியில்
சோக ரேகை படராமல் பார்க்க,
நீயில்லா நரகம் கடந்து
உன் மடியில் சொர்க்கம் காணப் பார்க்கிறேன்...
பாரியாலே.... பாரி உன் அனுமதிக்கேட்டு...!!

bottom of page