top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Lakshmi P r - India

Entry No: 

180

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்புள்ளம்

ஆற்றோரம் தென்னை மரம்
பத்து குலை தள்ளிருச்சி
பதநீரும் போட்டாச்சு
பச்சோலை அசைஞ்சு‌ பின்னால்
தென்றல் வந்து தாலாட்டுது

அருகருகே அமர்ந்திருந்து
கரையோரம் பார்த்திருக்க
கட்டுமரம் வந்திடுச்சு
இது என்ன? இது என்ன?
கட்டுவார் யாரும் இல்லே

திருப்பு தம்பி ஏலேலோ
தள்ளி விடு ஏலேலோ
இழுத்து கட்டு ஏலேலோ
இறக்கி கட்டு ஏலேலோ

எட்டி பார்த்தேன் ஆத்தாடி
பச்ச புள்ளி படுத்திருக்கு
பட்டோலை அருகிருக்க
ஏடெடுத்து படிச்சு பார்த்தா

வெள்ளம் வந்த வேகத்திலே
வீடும் அழிஞ்சிடுச்சி
தலைமோதி தண்ணி வந்து
தனி மரமாய் நின்ற
ஆச்சி அப்பன் இல்லா புள்ளை

கரையோரம் ஒதுங்கிய பிள்ளை
எடுத்து வளர்க்க ஆசை தான்
தங்க ஒரு இடமில்லை
தள்ளிவிட்ட கட்டுமரமே
தினப்படியும் படியளக்கும்

எனக்கெதுக்கு ஆசை பாசம்
ஒரு நிமிடம் யோசனை
பார்த்திருந்த இருவருமே பாய்ந்து எடுத்து அணைச்சனரே

ஈடு இணை அற்றதுவே பிள்ளை பாசம் அறிவீரே!

bottom of page