INTRO
Want to participate in Kolothsavam ?
View our Golu Awards Results
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Kumarakannan Asokan - India
Entry No:
536
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
தலைப்பு!
அனைவரும் அறிந்த ஒன்றே,
இருப்பினும் புரிந்த தொன்றோ?
மழளையின் சிரிப்பிலுண்டு,
பேதையின் குணத்திலுண்டு,
விடலையின் தேடலிலுண்டு,
மங்கையின் முதிர்ச்சியிலுண்டு,
காளையின் முறுக்கிலுண்டு,
மடந்தை மயக்கத்திலுண்டு,
மனைவி சேர்கையிலுண்டு,
தெரிவை கருத்தலிலுண்டு,
தாயின் சேவையிலுண்டு,
மீளியின் உழைப்பிலுண்டு,
மறவோன் திறவோனாகி,
மரணம் இனிக்கையிலுண்டு,
இடையில் நொடிமுள்ளாக,
ஓடும் இயக்கத்திலுண்டு,
ஒவ்வொரு நொடியினிடையில்,
நூறாண்டு வாழ்வதிலுண்டு,
புரிந்து உணர்ந்திடுவோம்,
வீணாய் போகிற!...
*காதலை*