REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
KIRUTHIKA THIRUGNANAM - India
Entry No:
444
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
கவிதை தலைப்பு :-
அன்பு
ஊர்ந்துவரும் எறும்பை அடிக்காதே!
புழு பூச்சிகளை கூட நீ அழிக்காதே!
பேரன்பை பேரண்டம் பேசட்டும்!
உள்ளன்பை உணர்ச்சிகளால் உரைக்கட்டும்!
அன்பே இறை சக்தி!!பெரும் பக்தி!
அண்டத்தை ஆட்கொள்ள அன்பே ஒரே உத்தி!
மனிதநேய மாடம் உள்ளே.,
நட்பை நாவால் நவின்று,
அன்பென்னும் விதை விதைத்திடு!
காதல் தண்ணீரால் அதன் தாகம் தணித்திடு!
பாசத்தைப் பகிர்ந்து பண்பாய் பராமரித்திடு!
இரக்கமென்னும் இயற்கை உரம் அளித்திடு!
விளையும் பரிவு பற்றி தேசம்!
அதில் நேசவாசம் மட்டுமே வீசும்!
வாசத்தை விரிவுபடுத்தி நிலைநாட்டு!
உலகிலிருக்கும் உயிர்களிடம் அன்பை மட்டுமே நீ காட்டு!!!
Entry No:
453
English Poetry
ENGLISH POEM :LOVE
Love makes you a king
To fly happily gives you Wing
Love spreads The Immortal peace
will make you a Masterpiece
As connecting people it is a bridge
Only to cut veggies use knife edge
Lovecan't be defined as it was out of world
It is precious and costly than Emerald
Lovable bonds with lot of enthusiasm
Gives words best highlighted mannerism
Spread love to improve connectivity
Can't be dismantled because it assures morality
Entry No:
440
தமிழ் கதை (Tamil Kadhai)
கதை தலைப்பு :- அன்பு
சல!சல! லொள்ளு! லொள்ளு !என்ற சத்தம் நலம்விரும்பி மகன் பூமி காதலனின் காதுகளுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. அது ஒரு இரவு நேரம். அவங்க வீட்ல தகர சீட்டு இருக்கறதுனால மழை பெய்கிறது தலையில உட்கார்ந்து யாரோ மோளம் அடிக்கிறது போல இருக்க, அவங்க தெருவுல இருக்குற ஒரு தெரு நாய் லொள்ளு லொள்ளு சத்தம் போடறத நிறுத்தவே இல்லை. அவங்க இருக்கிற தெருவில எல்லா வீட்லயும் கதவுகளை அடைத்து விட்டு மட்ட மல்லாக்கப் படுத்து எல்லாரும் குரட்டை விட்டுட்டு இருந்தாங்க. இவங்க வீட்ல தூக்கம் வராம பூமி காதலன் சத்தத்தால் தலைவலியில இருந்தா.
மழை பெய்கிறது கூட அவனுக்கு பிரச்சனை இல்ல ஆனா ,”இந்த தெரு நாய் எங்க இருந்து வந்துச்சோ, எங்கேயாவது போய் சும்மா இருக்க வேண்டியதுதானே, மழை சத்தமே முடியல ,இதுல இது வேற நம்மள ரொம்ப கொடுமை பண்ணுது, காலையில அதை கல்லெடுத்து அடிச்சா தான் மனசு ஆறும். அப்படின்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டே தூங்கிட்டான்.
காலையும் வந்துச்சு,…..மழையும் ஒருவழியா விட்டிருச்சி.,,,,,,
வெளிய வந்தா குளிரில் நடுங்கிக்கிட்டு நாய் வீட்டு வாசலில் படுத்து இருந்துச்சி. ஏற்கனவே கடுப்புல இருக்கிறவன் இன்னும் கடுப்பாகி செம கோவத்துல ,”எங்க அந்த பிரம்பு அதை எடுத்து சும்மா நச்சு நச்சுனு அடிக்கிறேன்”. அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்து அந்த நாயோட கண்களை பார்க்க அவனுக்குள்ள இருந்த கருணை கொஞ்சம் எட்டிப்பாத்துச்சு.
உட்கார்ந்து யோசிக்கும் போதுதான் அது ஒரு தெரு நாய் அங்கங்கு போடுறத தின்னிட்டு ,கிடைக்கிற இடத்தில படுத்திருக்கும் அப்படின்ற உண்மைபுரிஞ்சிடுச்சு.
ஆனா அதுவும் ஒரு உயிர்தானே அப்படின்னு நினைச்சிட்டு அவன் வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து சதுரமா செதுக்கி ஒரு சின்ன பெட்டி மாதிரி செஞ்சி அந்த நாய் கிட்ட வச்ச உடனே அந்த நாய் போய் அதுல படுத்துக்கிச்சி. அவனோட பள்ளிக்கூட பழைய சட்டையை எடுத்துட்டு வந்து அதுல வச்சிட்டா.
மறுநாள் இரவு,……
சலசல சத்தம் கேட்டுச்சு! ஏன்னா வர்ணபகவான் சிரிக்கிறார்., இன்னொரு ரெண்டு பேரோட சிரிக்கிற சத்தமும் கேட்டுச்சு, அது வேற யாரும் இல்ல,
புதுசா கட்டின பங்களா வீட்டில் இருக்கிற நம்ம பாசும்,
தகர சீட்டு போட்ட வீட்ல தூங்கப் போற நம்ப உண்மையான
பூமிகாதலனும் தான்..........
நீதி :-
அன்பின் வழியது
உயிர்நிலையாம்
அதுவே உயர்நிலையாம்