REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Kesentra Keines - India
Entry No:
262
தமிழ் கதை (Tamil Kadhai)
அவளுக்காக காத்திருக்கின்ற இந்த நொடிகள் நான் அனுபவித்த அழகிய தருணங்களை விழி முன் கொணர்கிறது.தூங்காமல் தவித்தபோது தாலாட்டை தந்த உறவு. பசி என்ற ஒன்று தோன்றும் முன்னே இரத்தத்தை உணவாய் தந்த உறவு. எனக்காக அனைத்து வலிகளையும் பொறுத்து எனக்கான வழியை அமைத்தவள்.நான் பெருமை பெற பலரின் சிறுமையை தாங்கி கொண்டாள். தாயாக தந்தையாக ஆசானாக தெய்வமாக தோழியாக இருந்தவள் இன்று தொலை தூரத்தில் துயில் கொள்கிறாள்.அன்பென்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்தவள் அவள்.நான் பெற்ற இன்பத்தில் இன்பம் கண்டவள்.என்னுடைய துன்பங்களை அவளின் துன்பமாக ஏற்று கொண்டவள்.அவளின் மடி சாய்ந்து ஆறுதல் அடைய வந்தபோது கண்டேன் என் விழியின் வழி வலிகள் கரைவதை, அன்புடன் முத்தம் கொடுத்து அரவணைத்து அன்பு மழை பொழிய அம்மா நீ இல்லை என்பதை இன்னும் என் மனம் ஏற்க மறுக்கிறது.என் அருகில் அமர்ந்து என்னை அணைக்க வா என்று மனம் பதைக்கின்றது.பட்டாம்பூச்சி என்னை பறக்க வைக்க "ரெக்கை" யாக வந்தவள் நீ.. என்னுடைய தோகையில் வண்ணமாய் இருந்தவள் இன்று சின்னமாய் ஆகினாள்."அம்மா" உனக்கு நிகர் நீயே தாயே........