top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

KEERTHANA P - India

Entry No: 

206

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அக்கியின் சிறகுகள்

அந்த நாட்களில்,
பெண்னே !ஏன் உன் முகம் வறுத்தம் கொள்கிறது?
கண்னே! ஏன் உன் கண்கள் கலங்குகிறது?
மலரே! ஏன் உன் இதழ்கள் வாடுகிறது?
கொடியே! ஏன் உன் உடல் வலு இழந்துப்போயிறுக்கிறது?
நிலவே! ஏன் நீ அழுத்தும் கொள்கிறாய்?
கதிரே! ஏன் நீ சுட்ரெரிகிறாய்?
உன் விழிகளில், பதிலை நான் கண்டேன்!!

துஞ்சாதே துணிச்சல் பெண்னே!
இவ்வுலகம் உன்னை தீட்டென்றுச் சொல்லி தீண்டாமை வளர்கிறதா?
மாதத்திற்கு மூன்று நாள் மரணத்தோடு போராடும் மாதர் திலகமே!
இம்மடையர்கள் கூறும் அவச்சொல்லைக் கேட்டு உனக்கு நீயே புட்டுப் போட்டுக்கொள்ளாதே!

சீறும் மலர்க்கொத்தே!
உன் இரக்கையில் சிறுத்துளி உதிரத்தைக் கண்டு அஞ்சாதே!
விரித்துப் பார்த்தால் அதில் உன் சரித்திரம் மறைந்திருக்கும் ,
உன் சிறகுகளை சிறகடித்துப் பறந்து, இம்மூடர்கள் வாயை மூடச்செய்!

வீரமங்கையே!
நீ யாருக்கும் அடிமை இல்லை என்று உரிமையோடு உறும்பி வா!
மூதுகு தண்டிற்கும் மூச்சுத் திணறல் வரும் அந்நாட்களில்,
அதை கண்டு சுவண்டுப் போகாதே!

தலைவணங்கும் தாய்க்குலமே!
தண்ணீர் போல் இருந்து விடு,
ஏனென்றால் அதற்கு ஒதுங்கிப் போகவும் தெரியும்,
அடித்துக் கொண்டுப் போகவும் தெரியும்!

கார்குழல் கண்மணியே!
முள்ளின் திறன் கண்டாயா?
காலால் மிதித்தவர்களைக் கூட , அவரின் கைகளைக் கொண்டே எடுக்க வைக்கிறது!- உன்னை
நீயே தாழ்த்திக்கொண்டு அடைப்பட்டுயிருக்காதே,

அக்கியின் சுவாலையே!
சிறகடித்து சிகரத்தில் அமர்வாயாக!
இரக்கையை மெறுக்கேற்றி
மேகத்திற்கும் மேல் பறப்பாயாக!
பயம் காட்டும் குள்ளநரிகள் கூட்டத்திலிருந்து வெளியே வா!
உன் அகவிழியால் அகிலத்தை பார்,
எங்கும் எதிலும் நீயே,
விழித்திரு(ற) மங்கையே!

இப்படிக்கு ,
மாற்றதின் துவக்கதில்,
கீர்த்தனா ப.

bottom of page