top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Kavithai thozhi Mythili - India
Entry No:
374
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
என் மனதில் மலர்ந்த முதல் அரும்பே..!
என் முகத்தில் முளைத்த முதல்
பருவே...!
பருவம் வந்த பின்னே
பாவையென்னுள் பதிந்தது
உன் முகமே..!
புதிதாய் ஒரு வெட்கம் படர்ந்தன
பலவிதத்தில்..!
நித்திரையில் நின் நினைவலைகள்
கவிவரியில் நின் வர்ணனைகள்
உந்தன் விழியழகில் நான்
வீழ்ந்திருக்க..!
மினுமினுப்பால் என் முகம்
மிளிர்ந்திருக்க..!
களவாடிய காதல் பொழுதினில்
கண்ணிமைத்த அந்நொடியிலே
கண்ணத்தில் ஒர் முத்தம்..!
இதமான இரவிலே இரு
இதழ்களுக்குள் ஒர் சத்தம்..!
உள்ளமெங்கும் படபடக்க..!
தேகமெங்கும் விறுவிறுக்க..!
திகைத்துப்போன இரம்மியப்
பொழுதால் நானோ மீளாது
மிதந்து செல்கிறேன்..
அனுதினமும்..!
bottom of page