REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Kavitha T - India
Entry No:
256
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பே...
சுடர் தரும் சூரியனும் சுகமாய் துயிலிட
அலைகொண்ட மனம் மட்டும் இடைவிடா ஒலித்திட நீ நான் நாம் மட்டும் காதல் சிறையில் கைதானோம் ஓர் இரவில்....
உன் முகம் பார்த்து வெட்கிப்போனேன்..
ஆயிரம் ஒளிதீபம் எற்றிய வெளிச்சம் கண்டேன் கண்கூசீ போனேன்...
உன் குற்றமற்றே அன்பில் குறுகி போனேன்...
குயிலாகி போனேன் -உன் பெயரை மட்டும் கூவும் குயிலாகி போனேன்....
என் ஸ்வாசமே எனை விட்டு போகாதே... நீங்கினால் என் ஜனனமே ஜடமாகி போகும்....
சிறு புனைகை சிந்திடு சிதறி போனேன் மனமெல்லாம் சில்லறையாய் என்னுள்...
என் பிம்பமே நீ சிந்திய கண்ணீர் துளியால் கடலாகிறது என் கண்கள்...
இப்படியே உன்னை பார்த்து கொண்டிருக்க வேண்டும் என்றுதான் என் இரவுகளிலும் கனவுகளின் கண்களை திறந்து வைத்திருக்கிறேன்..
அடுத்த பிறவியில் என் இதயத்தில் நீ பிறந்திடு அப்போது நீயறிவாய் என்னுள் உன் நினைவினை...
உடல் கொண்டு காத்திருப்பேன் உறவாக அல்ல. உயிராக என்னுள் உயிருற்றே...
என்றும் உன்னுள் உன் இதயமாய்...
நினைக்க மறந்தாலும் துடிக்க மறக்காதே.....
உன் ஓர் நொடி பார்வையால் மா திரையனாய் என்னுள் என் காதல் குருவாகி என் உயிரானாய் சனிகமனாய் என் விநாடி நாழிகை ஓரையானது நான் முகூர்த்தம் கேட்டு என் சாமமெல்லாம் பொழுதானது என் நாட்களும் நீ பக்கம் வர மாதங்களாய் அயனம் கொண்டது ஆண்டுகளாய் காத்திருப்பேன் உனக்காக அது வட்டம் ஆனாலும் அன்பே...