REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
KAVINGER NANJIL RAJAN T. VIJAYARAJAN - India
Entry No:
273
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
[05/06, 06:13] T VIJAYARAJAN: தவமிருப்பேன்
******************
இந்தியாமுழுதும் சுற்றிப்பார்த்தேன்
இவள்போல் ஒருத்தியில்லை என்
இதயத்தில் வாழும் தெய்வம்வேறு
இவளின்றி யாருமில்லை
இமைகளை திறந்தேன்
இன்முகம் கண்டேன்
இவள்தான் எனக்கு இயன்றவள் என்றேன்
இடர்களை வென்றேன் இமயத்தில் நின்றேன்
இடப்புறம் எனது
இருக்கையை தந்தேன்
இவளால் எல்லாம் சாத்தியம்
இல்லையேல் நானொரு பூஜ்யம்
இனியொருபிறவி இருக்குமென்றால்
இவளையேமணக்க தவமிருப்பேன்
கவி நாஞ்சில்
[05/06, 12:13] T VIJAYARAJAN: அண்டத்தின் அதிசயமோ
******************************
விடியும்போது விழிகள் கண்டது கனவா?
விளையாடியநானும் விண்வெளி சென்றது நிஜமா?
வெண்பனிநிறத்தில் உலவிய உருவங்கள் மானிடரா? இல்லை
என்மனவீட்டில் உதிக்கிற எண்ணத்தின் ஜீவாலைகளா?
காதுகளில்லா கருமுடியில்லா
கண்களையுடைய மனிதரென்ன?
கண்டதுமென்னை கற்பூரம்போல காணாமல்போன மர்மமென்ன?
கைகளில் இருந்த பொருட்களைக் கண்டேன் காகிதம் இல்லையது அதை
கசக்கியவுடனே
காரிருளாகி கடத்தது என்னஅது?
மழுங்கிய தலையுடன் மனிதனாய் திரிவதுநம்
மரணித்த முன்னோரோ? இல்லை
மானிடர்போன்ற மற்றொருபிறவி மறைந்தே வாழ்கிறதோ?
கீச்சொலியாக கேட்டதுயாவும் அவரது மொழிதானோ?
ஆச்சரியமாக கண்டதுநானும்
அண்டத்தின் அதிசயமோ?
கவி நாஞ்சில்
[20/06, 10:49] கவி நாஞ்சில்: அன்புக்கலை அங்கக்கலை
***************
ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும்
ஆண்டவனின் படைப்பு
அதிசயமோ அசிங்கியமோ
அவரவரின் நினைப்பு
கண்ணுமூக்குக் காதுபோல
அதுவுமொரு உறுப்பு
கண்டபடி பேசுவதால்
கலங்கிடாதோ மனசு
அந்தரங்கம் என்றவுடன்
அருவருப்பை விலக்கு அது
அண்டங்கடந்து ஆளுகின்ற
ஆனந்தத்தின் பிறப்பு
இனப்பெருக்கம் இல்லையென்றால்
இவ்வுலகம் எதற்கு
இன்பத்தோடு வாழ்வதற்கே
இன்னுயிர்கள் படைப்பு
அத்துமீறி பேசுவதை
அனைவருமே தவிர்ப்போம்
அன்புக்கலை அங்கக்கலை
அனுதினமும் படிப்போம்
கவி நாஞ்சில்
[20/06, 14:13] கவி நாஞ்சில்: வாழ்த்துரைப்பேன்
*********************
சங்ககாலத்து தமிழ் எடுத்து
ஸப்தசுரங்களில் பாட்டிசைப்பேன்
சந்தசுதிகளில் மெட்டமைத்து
இஷ்டதேவதையே உனக்களிப்பேன்
வங்கக்கடல்ஈன்ற சங்கெடுத்து
வைகைநதியுன்னை அலங்கரிப்பேன்
கங்கைநதிக்கரை மண்ணெடுத்து
தங்கசிலைசெய்து பரிசளிப்பேன்
வெண்ணிலவின் வட்ட முகமெடுத்து எந்தன்
கண்ணுக்குள்ளேதான் பதிப்பேன்
நள்ளிரவில்வரும் கனவுகளில் உந்தன்
நாணத்தையே நான்ரசிப்பேன்
வானவில்லின் வண்ணத் தூரிகையால்
ஓவியமாய் உன்னை நான்வடிப்பேன்
வைகறைப்பூக்களின் வாசத்திலே தினம்
வர்ணனை செய்துன்னை வாழ்த்துரைப்பேன்
தொடரும்........
கவிநாஞ்சில்
[20/06, 14:14] கவி நாஞ்சில்: புதுபுது அதிசயம்
*******************
இரவும் பகலும் ஒன்றெனக் கண்டேன்
இயந்திர வாழ்விலே
இயற்கையைமீறி இயங்குது உலகம்
இன்றைய நாளிலே
விழுதுகள் ஆடும் பொழுதுகள் யாவும்
பழுதுகள் ஆனதே
விடுதலை யில்லா விழிகளில் நாளும்
புரைதான் ஏறுதே
ஆனந்தமாக பாடிய பறவைகள்
அடங்கிப் போனதே ஆர்பரித்துஓங்கும் கடலின் அலைகள் அமைதியில் தூங்குதே
ஆகாயத்தில் அன்றாடம்பல அஸ்திரம் பறக்குதே
அபரிதமான. அறிவியல் வளர்சியில்
ஆயுள் குறையுதே
கலகலப்பான சிரிப்புகள் எல்லாம்
காற்றில் பறந்ததே
பலபலவண்ண கைபேசிகளில் விரல்
பரபராப்பானதே
கனவுகள் யாவும் கணணியில் புதைந்து
கட்டிலில் வாழுதிங்கே
கற்பனையெல்லாம் சொப்பனமாகி கைகளில் தவழுதிங்கே
காலையில் கூவும் சேவல்கள் எல்லாம்
போர்வையை மூடுதே
கதிரவன்மட்டும் கதியில்லாதினம்
கரைகளை காணுதே
நேரில பார்த்து கைகள் குலுக்குற
நேரம் தொலைஞ்சதே
போரில வீரனின் ஆயுதமெல்லாம்
வானில் தொங்குதே
ஆயிரமாயிரம் புதுபுது
அதிசயம் அனுதினம் பிறக்குதே
ஆயினும் இந்த மரணத்தை வெல்லும்
சூட்சுமம் தேடுதே
இயற்பியல் வேதியியல் உயிரியல் எல்லாம்
இளமையாய் இருக்குதிங்கே
இயற்கையைமீறி இயங்குறதெல்லாம்
இயற்கை எய்துதிங்கே
கவி நாஞ்சில்
[20/06, 14:14] கவி நாஞ்சில்: கண்ணைமூடி நடக்காதே
*******************-*******
போலியான உலகமிது
புரிந்து கொள்ளடா
வேலியிட்டு ஒன்னநாளும்
காத்துக் கொள்ளடா
பூமிமேல எல்லாமே
அழகுதானடா அதன்
உள்ளில்தானே எரிமலையும்
இருக்கு பாரடா
நம்பி மோசம் போகாமல்
நடையைப் போடடா
நாளை உனது நாளுக்கான
விடையைத் தேடடா
கிளைக்கு கிளை தாவுகின்ற
குரங்குகள் போலே
நொடிக்கு நொடி மாறுகின்ற
மனிதர்கள் இங்கே
தனக்குதானே நல்லவனாய்
வேஷம் போடுவார்
பிறரின் வாழ்வை கெடுப்பதற்க்கு
வழியைத் தேடுவார்
பொதுநலத்தைப் பேசி பேசி
சுயநலம் அடைவார்
பொதுஜனத்தின் வாழ்க்கையத்தான்
வீதியில் விடுவார்
தன்னைத்தானே தலைவனென்று
தலைக்கனம் கொள்வார்
தவறைதட்டிக் கேட்போரின்
தலையினைக் கொய்வார்
கோடிகோடி கொட்டி ஆட்சி
கோட்டையைப் பிடிப்பார்
கொஞ்சநாளில் சொன்னதந்த
கொள்கையை மறப்பார்
ஆசைதீர அனுபவிக்க
அடைக்கலம் கொள்வார்
ஆறியதும் அத்துமீறி
அம்புகள் எய்வார்
அற்பசுகம் தேடி பெற்றப்
பிள்ளையைக் கொல்வார்
அண்ணன் தங்கை உறவினிலே
பிள்ளைகள் பெறுவார்
காமக்கணை வீசிவீசி
கற்பினை வெல்வார்
கடைசியில காதலைத்தான்
தப்புண்ணு சொல்வார்
ஊனமான பிறவிகளை
ஊதாசினம் செய்வார் தான்
ஈரலில்லா ஈனரென்று
எடுத்துக்காட்டுவார்
காசுபணம் உள்ளயிடத்தில்
கடவுள் இருக்கிறார்
மாசில்லாத மனங்களைத்தான்
மயக்கி வைக்கிறார்
நேற்றிருந்த நீதிநேர்மை
நீர்த்து போச்சுடா
நியாயம் கேட்டு நீதிமன்றம்
ரோட்டில் ஆச்சடா
கண்ணைமூடி நடந்ததெல்லாம்
அந்தகாலம்டா இப்ப
மண்ணமூடி போய்விடுவார்
கவனம் வேணும்டா
கவிநாஞ்சில்
[20/06, 14:14] கவி நாஞ்சில்: வாழ்க்கை ஒண்ணுமில்லை போடா
வாடி வதங்காதே வீணா ?
காக்கைக் குருவிகளைப் பார்த்தா
வாழப் பிடிக்குமடா தானா
காசு பணமுனக்கு கேடா
காதல் மனசுக்கது ஈடா
வாசல் இல்லாத வீடா அட
வாழ்க்கை வாழத்தான் போடா
ஆசைக்கு அணைகட்டி
அன்புக்கு கரம்நீட்டி
ஆயூளை நீகூட்டடா--- மன
அமைதிக்கு தாலாட்டடா
வாழ்வது ஒருமுறைதான்
வாய்ப்புக்கள் பலமுறைதான்
வாய்த்ததில் பெருமிதந்தான் தரும் வாசனை தினந்தினந்தான்
மேடு பள்ளமான பூமியதில்
ஓடும் நதிகளை கவனியடா
தேடும் விழிகளில் காணுமந்த
வாடும் உயிர்களின் அவனியடா
ஆணவத் திமிரை அழித்துவிடு பிறர்
ஏளனச்செயலை ஒழித்துவிடு
காரணம் எதுவென அறிந்துவிடு முக்-
காலத்தை கண்களால் அளந்துவிடு
நமக்கென வாய்த்தது நாடிவரும் பிறர்கென அளந்தது ஓடிவிடும்
ஏனென நினைதால் குழம்பிவிடும் மனம்
ஏக்கத்திலே தினம் குலைந்துவிடும்
மாயங்கள் நடக்கும் மண்ணிலே வண்ணச் சாயங்கள் போவது சகஜமடா நியாயங்கள் நெஞ்சில் கொண்டிருந்தால் மன நிம்மதி உன்னில் காணுமடா
ஆடை அலங்கார வேஷமடா உள்ளில் ஆடு புலியாட்டம் ஆடுமடா
பாடைவரை பகல்வேஷமடா நீ
பார்த்து பயந்தால் இழிபேசுமடா
கவி நாஞ்சில்
[20/06, 14:14] கவி நாஞ்சில்: இறைவன் வரம்
******************
காலையில் மலர்ந்து மாலையில் மடியும் பூதான் வாழ்க்கையடா
கண்களைக் கவரும் வண்ணங்கள் இருந்தும் வாடுதல் இயற்கையடா
வாசனை வீசிடும் தூரம்
வண்டுகள் மொய்த்திடும் காலம்
தோரணம் ஆகிடும் நேரம்
தோள்களில் ஆடிடும் ஆரம்
பூக்களை விரித்திடும் காலம்
பூஜைகள் வாசலைத் தேடும்
பூவிதழ் வீழ்ந்திடும் நேரம்
பூமியில் பாரமாய் தோணும்
சருகினை எண்ணி கருகாதே
உருவினை கண்டு உருகாதே
உதிப்பதும் உதிர்வதும் நிஜம்தானே இந்த
உண்மையை உணர்ந்தால் நலந்தானே
பச்சையிலை நாளை சருகாகும்
பால்மரம்கூட விறகாகும்
வெற்றிலைக் கொடியே உறவாகும் நம்
வெற்றிகள் மண்ணில் உரமாகும்
இயங்குதல் இன்பம் என்றே எண்ணு
இதயம் பலமாகும்
இரவும் பகலும் போன்றதே வாழ்க்கை
இறைவன் வரமாகும்
கவி நாஞ்சில்